உலகம்
’’பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை தாக்குதல்..?” : ரஷ்ய ராணுவம் மீது உக்ரைன் பகீர் குற்றச்சாட்டு!
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் 10 நாட்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும் இருதரப்புக்கு இடையே நடந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதேபோல் உக்ரைன் ராணுவத்தின் முக்கிய இடங்களை ரஷ்ய வீரர்கள் குண்டுகளை வீசி அழித்துள்ளனர்.
அதேபோல், உக்ரைன் தலைநகரான கீவ் நகரத்தை ரஷ்ய வீரர்கள் பாதிக்குமேல் கைப்பற்றியுள்ளனர். மேலும் மற்ற நகரங்களையும் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தப் போரை நிறுத்துவது தொடர்பாக இரண்டு நாட்டு அதிகாரிகளும் முதல் கட்டமாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து இருநாடுகளும் பேசி வருகின்றன.
இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ளவர்கள் வெளியேற மனிதாபிமான அடிப்படையில் போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்ய அறிவித்துள்ள நிலையில், ரஷ்ய வீரர்கள் உக்ரைன் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மந்திரி டிமிட்ரோ குலேபா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "உக்ரைன் நகரங்களில் விளாடிமிர் புதினின் படைகள் பல இடங்களில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளன. இதுதொடர்பாக நாடு முழுவதும் பல இடங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த குற்றத்துக்காக புதின் போர்க்குற்ற நீதிமன்றத்தை எதிர்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!
-
ஒரே ஆண்டில் 17,702 பேருக்கு அரசு வேலை : சாதனை படைத்த TNPSC!
-
”பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!