உலகம்

இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் அவசர உத்தரவு... என்ன நடக்கிறது உக்ரைனில்?

உக்ரைன் நாட்டு நேரப்படி இன்று மாலை 6 மணிக்குள் கார்கிவிலிருந்து வெளியேற இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே 7-வது நாளாக போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் ரஷ்யா ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்யப் படைகள் சுற்றிவளைத்திருப்பதாகவும் ஏவுகனை தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு மிகப் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

இந்நிலையில், பாதுகாப்பு நலன் கருதி உக்ரைனின் கார்கிவிலிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது.

உக்ரைன் நாட்டு நேரப்படி இன்று மாலை 6 மணிக்குள் கார்கிவ்வை விட்டு உடனடியாக வெளியேற இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கார்கிவ்வில் உள்ள இந்தியர்கள் பெசோஷின், பபாயி உள்ளிட்ட பகுதிகளைச் நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாகனங்கள் கிடைக்காவிட்டால் நடந்தாவது வெளியேறுங்கள் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருப்பதால் உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் மட்டுமல்லாது, அவர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் பீதியடைந்துள்ளனர்.

Also Read: உக்ரைன் - ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா வருவது ஏன்? - தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் பைடன்!