உலகம்

“சாப்பாடு, தண்ணி இல்ல..“ : உக்ரைனில் பதுங்கு குழிகளில் தவிக்கும் இந்திய மாணவர்கள் - வீடியோ வைரல்!

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன. உக்ரைன் அரசு பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அவர்களை போர் ஏற்படும் சூழலில் பதுங்கிக் கொள்ள ஏற்படுத்தப்பட்டுள்ள பதுங்கு குழிகளில் தங்க வலியுறுத்தியது.

இதனையடுத்து இந்தியாவைச் சேர்ந்த பல மாணவர்கள் பதுங்கு குழிகளில் சரியான உணவு, உடை மற்றும் காற்றோட்டம் இன்றி பல நாட்களாக தங்கி வருகின்றனர்.

இதுகுறித்து பெங்களூரைச் சேர்ந்த மருத்துவ மாணவி மேக்னா முன்னதாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவம் பயிலும் மாணவர்கள் பதுங்கு குழிகளில் தங்கியுள்ளதாகவும் தங்களை பத்திரமாக தாயகம் மீட்டுவர இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஒன்றிய அரசு மீட்பு விமானங்கள் மூலமாக உக்ரைனிலிருந்து மாணவர்களை மீட்டு அழைத்து வர திட்டமிட்டுள்ளது. ருமேனியாவின் புக்காரெஸ்ட்டில் இருந்து 219 இந்தியர்களுடன் முதல் விமானம் புறப்பட்டது.

Also Read: ”உக்ரைன் உக்கிரம் தேவையில்லை; சோவியத் இதனை தவிர்ப்பதே நல்லது” - முரசொலி தலையங்கம் கூறுவது என்ன?