உலகம்
கைவிரித்த அமெரிக்கா - உக்ரைனுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய Hackers : ரஷ்யாவின் இணையதளங்களை முடக்க முயற்சி!
உலக நாடுகளின் எதிர்ப்பைப் புறந்தள்ளி உக்ரைன் மீது ரஷ்யா நேற்று தனது தாக்குதலை தொடங்கியது. உக்ரைனின் தலைநகரை முழுமையாக கைப்பற்றும் எண்ணத்துடன் படைகள் முன்னேறி வருகின்றன. 2வது நாளாக தொடரும் இந்த தாக்குதலில் இதுவரை 137 வீரர்கள் பலியாகி உள்ளனர். முதல் நாளில் மட்டும் 11 விமானப்படைத் தளங்கள் உட்பட 74 ராணுவ தளங்களை அழித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன. இதனிடையே ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதி செய்ய உக்ரைன் மீது போர் தொடுப்பதைத் தவிர தங்களுக்கு வேறு வழி இல்லை என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் அரசுக்கு தொடர்புடைய இணைய தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் லாட்வியா, லிதுவேனியா நாடுகளிலும் இணையதள சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், உலகின் சக்தி வாய்ந்த ‘அனானிமஸ்’ ஹேக்கர் குழு உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கியதாகக் கூறப்படுகிறது. இதில், ரஷ்யா மீது சைபர் போரை அறிவித்துள்ள அனானிமஸ், முதல்கட்டமாக ரஷ்ய அரசு இணைய தளங்களை முடக்கும் பணியைத் துவங்கியிருக்கிறது. ரஷ்யாவின் ஃபெடரல் ஆன்டிமோனோபோலி வலைதளப்பக்கம் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் RT எனப்படும் ரஷ்யாவின் செய்தி ஊடக சேவையும் முடக்கப்பட்டுள்ளது. பின்னர் அரைமணிநேரத்தில் இந்தச் சேவை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இரண்டு நாட்களாக ரஷ்யா, உக்ரைனுக்கு இடையே தாக்குல் நடைபெற்று வரும் நிலையில் இரண்டு நாடும் சைபர் தாக்குதலை தொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இணையதள தாக்குதல் காரணமாக மறைமுகாக பல நாடுகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!