உலகம்
ஒரு சூப்பர் மார்க்கெட்டில் 22 முறை திருட முயற்சி.. குற்றவாளியை விடுதலை செய்த நீதிமன்றம் : என்ன காரணம்?
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜான்ரே லோமாக். இவர் சியாட்டி நகரில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்குச் சென்றுள்ளார். பின்னர் 70 இன்ச் டி.வியுடன் அவர் வெளியேவந்துள்ளார். இதைப்பார்த்த சூப்பர் மார்க்கெட் பாதுகாவலர்கள் அவரிடம் டி.வி வாங்கியதற்கான ரசீதைக் கேட்டுள்ளனர்.
அப்போது, அவர் டி.வியை தூக்கிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார். இதையடுத்து அவர்கள் ஜான்ரே லோமாக்கை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அதில், கடந்த மூன்று மாதங்களில் இதே சூப்பர் மார்க்கெட்டில் 22 முறை திருட முயற்சித்துள்ளார். மேலும் கடந்த டிசம்பர் மாதம்தான் டிவி ஒன்றைத் திருட முயன்றபோது மாட்டிக் கொண்டுள்ளார்.
இதனால் அவரை இந்த கடைக்குள் நுழை தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் மீண்டும் டிவியை திருட முயற்சி செய்து மாட்டிக் கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் ஜோன்ரே லோமாக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர் வீடற்றவர் என்பதால் நீதிபதி லோமாக்கை விடுவித்து உத்தரவிட்டார். இதனால் அவரை போலிஸார் விடுதலை செய்தனர்.
Also Read
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!