உலகம்
“2 ஆண்டுகளில் 330 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் பலி?” : USA நிறுவனம் வெளியிட்ட ‘பகீர்’ தகவல் - பின்னணி என்ன?
இரண்டு வருட கொரோனா ஊரடங்கிற்கு பிறகு உலக நாடுகளில் கடும் கட்டுப்பாடுகளுடம் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பொதுவாக உற்சாகமுடன் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டும் அமெரிக்காவில் இந்த ஆண்டு கொண்டாட்டம் வித்தியாசமாக அமைந்திருந்தது.
குறிப்பாக குறைவான எண்ணிக்கையிலேயே கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் தெருக்களில் மக்களை வாழ்த்தினார்கள். சில கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் இறந்த நிலையில், கொரோனா தொற்று அதிகரிப்பால் மால்கள் மூடப்பட்டதும் மற்றொரு காரணம்.
அமெரிக்காவில் சாண்டாஸ்களுக்கான சர்வதேச சகோதரத்துவ அமைப்பு (ஐ.பி.ஆர்.பி.எஸ்) இந்த ஆண்டில் மட்டும் 55 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர் ஸ்டீபன் அர்னால்டு கூறுகையில், “கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் பொதுவாக குண்டான மனிதர்கள்.
அவர்களில் பெரும் பாலானோர் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள். மேலும், சர்க்கரை நோய் பாதிப்பும் உள்ளது. அதனுடன் இதய நோய், சிறுநீரக பிரச்சனை போன்ற பல உடல் உபாதைகள் உள்ளன.
இந்த அமைப்பை சார்ந்த சுமார் 1,900 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் கொரோனாவால் தீவிர பாதிப்புக்கு உள்ளாகினர். ஆரோக்கிய குறைபாடு அடைந்துள்ளனர். மேலும், கொரோனா காரணமாக தாத்தாக்கள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. வயது முதிர்வு காரணமாக சில கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் உயிரிழந்துள்ளனர்.
‘சாண்டாஸ் கடைசி ரைடின்’ நிறுவனர் கார்லோ கிளெம் கூறுகையில், எனக்கு தெரிந்த வரை இந்த ஆண்டில் மட்டும் 330 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் உயிரிழந்துள்ளனர் என்று கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளார்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!