உலகம்
ஒமைக்ரானுக்கு முதல் உயிர்பலி... இங்கிலாந்தில் அச்சம்.. எச்சரிக்கை மணி அடித்த போரிஸ் ஜான்சன்!
பிரிட்டனில் ஒமைக்ரான் வைரஸுக்கு முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான் வைரஸ் பரவலையடுத்து இங்கிலாந்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஒமைக்ரான் தொற்றுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றமடைந்த ஒமைக்ரான் தொற்று இதுவரை 63 நாடுகளில் பரவியுள்ளது. டெல்டா வைரஸை விட ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவுவதாகவும், தடுப்பூசியின் செயல்திறனை குறைக்கும் ஆற்றலை பெற்றுள்ளதாகவும் மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பிரிட்டனில் ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதுகுறித்து அந்நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், “ஒமைக்ரான் பேரலை வந்து கொண்டிருக்கிறது. ஒமைக்ரான் வேகமாகப் பரவுகிறது.
பிரிட்டனில் இதுவரை மொத்தம் 3,137 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதிலிருந்து பாதுகாப்பாக இருக்க நமக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை.” என எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் இன்று, ஒமைக்ரான் வைரஸால் பிரிட்டனில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!