உலகம்

1 மணி 25 நிமிடங்கள் அமெரிக்க அதிபராகச் செயல்பட்ட கமலா ஹாரிஸ் : 250 ஆண்டு வரலாற்றில் முதல் பெண் அதிபர்!

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் உள்ளார். 79 வயதாகும் இவருக்கு வாஷிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது, ஜோ பைடனுக்கு மயக்க மருந்து செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது.

இதனால் அவர் மயக்க நிலையிலிருந்துள்ளார். இதன் காரணமாக துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு அதிபருக்காக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் அமெரிக்க அதிபராகப் பதவியிலிருந்து பணிகளை மேற்கொண்டார் என வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் அதிபருக்கான நாற்காலியில் அமரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. பின்னர் மருத்துவ பரிசோதனைகள் முடிந்து சுயநினைவுக்கு வந்த பிறகு மீண்டும் தனது அதிகாரத்தைப் பெற்று அதிபராக பணிகளைத் தொடர்ந்தார். இதற்கு முன்பும் இப்படி ஒரு சம்பவம் ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்தபோது நடந்துள்ளது.

அப்போது ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்தபோது மருத்துவ பரிசோதனை நேரத்தில் அப்போதைய துணை அதிபர் அதிபருக்கான பணிகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

தற்காலிக அதிபராகப் பதவியேற்றதன் மூலம் 250 ஆண்டு அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாகப் பெண் அதிபராக அதிகாரம் பெற்றவர் என்ற பெருமையைக் கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.

Also Read: திருந்தக்கூடியவரா மோடி? வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட என்ன காரணம்? இனி என்ன நடக்கும்?