உலகம்

ஆன்லைன் வகுப்பின்போது வெடித்த செல்போன்... மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்!

உலகம் முழுவதும் கொரோனா பரவியதை அடுத்து ஆன்லைன் மூலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா பாதிப்பு குறைந்த சில நாடுகளில் நேரடியான வகுப்புகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வியட்நாம் நாட்டில் உள்ள, நாம் டென் மாவட்டத்தைச் சேர்ந்த 5ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் அக்டோபர் 14ஆம் தேதி ஆன்லைன் வகுப்பில் பாடம் படித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, மாணவர் செல்போனுக்கு சார்ஜ் போட்டவாறு, காதில் இயர்போனை மாட்டிக்கொண்டு பாடத்தைக் கவனித்துக் கொண்டிருந்துள்ளார். அந்தநேரம் செல்போனின் பேட்டரி அதிகமாகச் சூடாகி வெடித்துள்ளது.

இதில் மாணவரின் உடலில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவரின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

இந்தியாவில் கூட கல்லூரி மாணவர் ஒருவர் செல்போனுக்கு சார்ஜ் செய்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். உலகம் முழுவதும் சார்ஜ் செய்யும்போது செல்போன் வெடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், இந்நிகழ்வுகள் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தண்ணி இல்லாத காட்டில் மாட்டிக்கொண்ட 2 பேர்.. 1 வாரம் கழித்து மீட்ட போலிஸ்: ஆஸ்திரேலியாவில் நடந்தது என்ன?