உலகம்
தாயை சுட்டுக்கொன்ற குழந்தை... தந்தையை கைது செய்த போலிஸ் : ஃப்ளோரிடாவில் நடந்தது என்ன?
அமெரிக்காவின் ஃப்ளோரிடாவைச் சேர்ந்தவர் ஷமயாலின். இவரது கணவர் அவேரி. இந்த இளம் தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று ஷமயாலின் தனது வேலை தொடர்பாக ஜூம் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது அறையில் இருந்த பையில் துப்பாக்கி இருந்துள்ளது. அதை எடுத்த குழந்தை தாயின் பின்னால் நின்று துப்பாக்கியை அழுத்தியுள்ளது. இதில் குண்டு வெளியேறி தாயின் தலையில் பாய்ந்துள்ளது. இதனால் அவர் நாற்காலியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
பிறகு, தாய் ரத்த வெள்ளத்தில் விழுந்ததைப் பார்த்து அந்த குழந்தை அழுதுகொண்டே இருந்துள்ளது. இதையடுத்து வெளியே சென்ற அவேரி வீட்டிற்கு வந்தபோது மனைவி ரத்த வெள்ளத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த போலிஸார் நடந்தது குறித்து விசாரணை செய்தனர். இதில் குழந்தை தெரியாமல் துப்பாக்கியை அழுத்தியதில் குண்டு பாய்ந்து ஷமயாலின் இறந்து தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் பாதுகாப்பான இடத்தில் துப்பாக்கியை வைக்காததால்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது எனக் கூறி குழந்தையின் தந்தை அவேரியை கைது செய்தனர். பின்னர் இரண்டு குழந்தைகளையும் பராமரிப்பதற்காக அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!