உலகம்
”பெண்களுக்கு அமைச்சரைவையில் இடமில்லை” - தாலிபான்களுக்கு எதிராக ஆப்கனில் தொடர் போராட்டம்!
தாலிபான்களின் ஆக்கிரமிப்பால் மிரண்டு போயிருக்கும் ஆப்கானியர்கள் வேறு நாடுகளுக்கு இடம்பெயர்வதற்கு வரிசைக்கட்டி காத்து கிடக்கிறார்கள். இதுவரையில் சுமார் ஒரு லட்சம் பேர் ஆப்கானிஸ்தானை விட்டு சென்றிருக்கிறார்கள்.
இந்நிலையில், முழுமையான அரசை அமைக்காத போதும் தாலிபான்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்கள். குறிப்பாக பெண்களுக்கான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது தாலிபன் அமைப்பு.
அதன்படி முந்தைய ஆட்சியின் போது ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் வெளியே வந்தாலே சவுக்கடி, தலைத் துண்டிப்பு என கொடூரங்கள் நடந்தது. ஆனால் தற்போது உடல் முழுவதும் மறைக்கும் பர்தா, நிக்காப், புர்கா போன்ற உடைகளை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெண்கள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அதிலும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில், பெண்களுக்கு பெண் ஆசிரியர்கள்தான் பயிற்றுவிப்பார்கள். பல்கலைக்கழகங்களில் சில பிரிவுகளில் மட்டும் ஆண் ஆசிரியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதுவும் வயதான நல்ல ஒழுக்கம் கொண்ட ஆண்களே அனுமதிக்கப்படுவார்கள். பள்ளி, கல்லூரி நேரம் முடிந்த பின் மாணவிகள் முதலில் வெளியேற வேண்டும். அவர்கள் சென்ற 5 நிமிடங்களுக்கு பிறகே மாணவர்களை விடுவிக்க வேண்டும்.
மேலும் பெண்கள் செவிலியர்களாக பணியாற்ற தடையில்லை. ஆனால் ஒருபோதும் அமைச்சரவையில் பெண்களை அனுமதிக்கமாட்டோம் என தாலிபான்கள் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்கள்.
முன்னதாக பெண்களுக்கு எதிரான தாலிபான்களின் அட்டூழியங்களை கண்டித்து காபூலின் சில பகுதிகளில் பெண்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் எங்களை மிரட்ட வேண்டாம் எனவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
Also Read
-
நீதித்துறை குறித்த அமித்ஷாவின் சர்ச்சை கருத்து.... பொங்கி எழுந்த 18 முன்னாள் நீதிபதிகள்... விவரம் என்ன ?
-
“மக்களுக்கான திட்டங்களை சீர்குலைக்கும் ஒன்றிய பாஜக அரசு!” : TOI நாளிதழுக்கு முதலமைச்சர் சிறப்பு கட்டுரை!
-
சென்னையில் நடைபெற்ற தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் : சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு !
-
“அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற முழு மூச்சுடன் பாடுபடுவேன்!” : சென்னையில் நீதியரசர் சுதர்சன் உறுதி!
-
எடப்பாடி பழனிசாமியின் மிரட்டல் எதிரொலி... ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்க முயன்ற அதிமுகவினர் !