உலகம்
செல்போனை விழுங்கிய வாலிபரின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்... ஆனால், பேட்டரியால் ஏற்பட்ட சிக்கல்!
குழந்தைகள் பொதுவாக காசு, பட்டன்கள் அல்லது சிறிய பொருட்களை ஏதாவது விழுங்கிவிட்டார்கள் என்ற செய்தியை நாம் கேட்டிருப்போம், பார்த்திருப்போம். ஆனால் வாலிபர் ஒருவர் செல்போனையே விழுங்கிய சம்பவம் ஒன்று கொசாவா நாட்டில் நடந்துள்ளது.
கொசாவா நாட்டின் ஓல்டு பிரிஸ்டினா பகுதியைச் சேர்ந்த வாலிபர்தான் 2000ஆம் ஆண்டு வெளியான நோக்கியா 3310 மாடல் செல்போனை விழுங்கியுள்ளார். இந்த செல்போனை பொதுவாக 'செங்கல் போன்’ என பலரும் அழைத்துவந்தனர். அந்த அளவுக்கு இந்த போன் பெரிதாகவும், கனமாகவும் இருக்கும்.
செல்போனை விழுங்கியதால் தொடர்ந்து கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த அவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவரை ஸ்கேன் செய்து பார்த்தபோது மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரது வயிற்றில் செல்போன் உடைந்து மூன்று பாகங்களாக இருந்துள்ளது.
இதையடுத்து அந்த வாலிபருக்கு உடனே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து செல்போனை வெளியே எடுத்தனர். இருப்பினும் செல்போன் பேட்டரியில் இருந்து வெளியேறிய அமிலம் வயிற்றில் கலந்திருப்பதால் அவரது உயிருக்கு இன்னும் அச்சுறுத்தல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "ஒரு பொருளை விழுங்கியதாக நோயாளி பற்றி அழைப்பு வந்தது. பின்னர் மருத்துவமனையில் நாங்கள் அவருக்கு ஸ்கேன் செய்தபோது அவரது வயிற்றில் தொலைபேசி மூன்று பாகங்களாக பிரிந்திருப்பதைக் கவனித்தோம்.
எங்களுக்கு செல்போன் பேட்டரியை நினைத்துத்தான் கவலையாக இருந்தது. ஏனென்றால் அது வெடிக்கும் தன்மை கொண்டது. பிறகு வெற்றிகரமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்து முடித்துள்ளோம். இந்த சிகிச்சை செய்ய இரண்டு மணி நேரம் ஆனது" எனத் தெரிவித்துள்ளார்.
அந்த வாலிபர் ஏன் செல்போனை விழுங்கினார் என்பது இன்னும் தெரியவில்லை. 2016ஆம் ஆண்டும் இளைஞர் ஒருவர் செல்போனை விழுங்கினார். அவருக்கும் அறுவை சிகிச்சை செய்து செல்போன் அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !