உலகம்
300க்கும் மேற்பட்ட யானைகள் இறந்ததற்கு இதுதான் காரணமா? - வெளியான அதிர்ச்சி தகவல்!
போட்ஸ்வானாவில் 1,30,000 ஆப்பிரிக்க யானைகள் உள்ளன. வேறு எந்த கண்டத்திலும் நாட்டிலும் இருப்பதை விட அங்குதான் அதிகம். போட்ஸ்வானா அரசு 2014 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலிருந்த யானை வேட்டைத் தடையை கடந்த ஆண்டு முதல் ரத்து செய்தது. இது சர்வதேச அளவில் எதிர்ப்பைச் சந்தித்தது.
இந்நிலையில், சில மாதங்களில் 300க்கும் மேற்பட்ட யானைகளின் இறப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த மூன்று மாத காலகட்டத்தில் நிகழ்ந்த யானை இறப்புகள், அவற்றின் காரணம் அனைத்தும் ஆரம்பத்தில் ஒரு மர்மமாகவே இருந்தது; இறப்புகள் குறித்து ஊகங்கள் அதிகரித்ததால், யானையின் சடலம், மண் மற்றும் நீர் மாதிரிகள் மீது ஆய்வக சோதனைகளை மேற்கொள்ள போட்ஸ்வானா அரசு உத்தரவிட்டது.
எனவே ஆப்ரிக்காவின் தெற்குப்பகுதியில் உள்ள போட்ஸ்வானாவில் 300க்கும் மேற்பட்ட யானைகள் நீர்நிலைகளில் நச்சு உற்பத்தி செய்யும் சயனோபாக்டீரியாவால் கொல்லப்பட்டுள்ளன என்று அரசு வனவிலங்கு அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். ஆனால் அந்த விளக்கம் சில பாதுகாவலர்களைத் திருப்திப்படுத்தவில்லை.
”சயனோபாக்டீரியா வழக்கமாக நீரில் காணப்படுகிறது, ஆனால் அவை அனைத்தும் நச்சுகளை உருவாக்குவதில்லை. நீரின் வெப்பநிலை அதிகரிக்கும்போதும் பாக்டீரியா வளர நிலைமை மிகவும் சாதகமாக மாறும்போதும் பாக்டீரியா அதிக நச்சுகளை உற்பத்தி செய்கிறது ” என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?