உலகம்
“இத்தாலி, ஸ்பெயினை ஒரே நாளில் பின்னுக்கு தள்ளிய இந்தியா” : விழித்துக்கொள்ளுமா மோடி அரசு?
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 6,982,061 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 402,241 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். உலக நாடுகளில் அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 1,988,544 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 112,096 பேர் பலியாகினர்.
அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசிலில் 676,494 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 36,044 பேர் பலியாகி உள்ளனர். இந்த வரிசையில் கொரோனாவால் உலகளவில் மோசமாக பாதித்த நாடுகள் பட்டியலில் இத்தாலி, ஸ்பெயினை ஒரே நாளில் பின்னுக்கு தள்ளிவிட்டு 10வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 6வது இடத்திற்கு வந்துள்ளன.
அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்தில் வைரஸ் தொற்றின் தீவிரம் தணியத் தொடங்கிய நிலையில், இந்தியா, ரஷ்யா, பிரேசில் போன்ற நாடுகளில் கடுமையாக அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் 247,040 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 6,946 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 1,14,072 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு மிக குறைவான எண்ணிக்கையில் இருப்பது சற்றே ஆறுதலாக இருந்தாலும் கடந்த மூன்ற நாட்களாகவே தொடர்ந்து 9 ஆயிரத்திற்கு மேலானோர் பாதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 3,413,349 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிகையைவிட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்பது வேதனைக் கூறியவிசயமாகும்.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!