உலகம்

“3.93 லட்சத்தைக் கடந்த உயிர்பலி - 66 லட்சம் பேருக்கு பாதிப்பு” : உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா!

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.

கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. இன்னும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 6,698,370 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 393,142 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.

அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 1,924,051 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசிலில் 615,870 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 226,713 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 6,363 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றால் அமெரிக்காவில் மட்டும் 110,173 பேர் பலியாகினர். பிரேசிலில் 34,039 பேர் பலியாகி உள்ளனர். பிரான்ஸில் 29,065 பேரும் உயிரிழந்துள்ளன. உலகம் முழுவதும் சுமார் 3,249,457 பேர் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

வைரஸ் பாதிப்பின் உயிர்பலி உலக மக்களை நடுங்கச் செய்துள்ளது. மக்கள் ஊரடங்கைக் கடைபிடிப்பதே ஒரே வழி. விரைந்து நடவடிக்கை எடுக்க ஐ.நா-வும் வலியுறுத்தி வருகிறது.

Also Read: “கொரோனா தொற்றின் பிடியில் சென்னை : கட்டுப்படுத்தும் லட்சணம் இதுதானா?” - அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!