உலகம்
“2020 முடிவில் 8.6 கோடி குழந்தைகள் வறுமையின் கோரப்பிடியில் தள்ளப்படுவார்கள்” - UNICEF ஆய்வில் எச்சரிக்கை!
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார விளைவுகள் மூலம் இந்தாண்டின் இறுதிக்குள் 8.6 கோடி குழந்தைகள் வறுமையில் தள்ளப்படக்கூடும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘சேவ் தி சில்ட்ரன்’ மற்றும் ‘யுனிசெப்’ இணைந்து கொரோனாவுக்குப் பின்பான விளைவுகள் குறித்து ஆய்வு நடத்தின.
அந்த ஆய்வின் முடிவில், “உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார விளைவுகளால், இந்தாண்டின் இறுதிக்குள் 8.6 கோடி குழந்தைகள் வறுமையில் தள்ளப்படக்கூடும்.
இதனால், வறுமையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை காட்டிலும் 15 சதவீதம் அதிகரித்து, 67.2 கோடியாக இருக்கும். இதில் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் ஆப்ரிக்கா மற்றும் தெற்காசியாவில் இருப்பவர்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து யுனிசெப் நிர்வாக இயக்குனர் ஹென்றிட்டா ஃபோர் தனது அறிக்கையில் “குடும்பங்களிடையே நிதி நெருக்கடியின் அளவும், ஆழமும் குழந்தைகளை வறுமைக்குள் தள்ளுகிறது. ஏழ்மையான குடும்பங்கள் பல தசாப்தங்களாக காணாத அளவிலான பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சேவ் தி சில்ட்ரன் தலைவர் இங்கர் ஆஷிங் கூறுகையில், “குறுகிய கால பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் கூட குழந்தைகளின் முழு வாழ்க்கையையும் பாதிக்கக்கூடும். நாம் இப்போதே தீர்க்கமாகச் செயல்பட்டால், மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாட்டிலிருக்கும் சில குழந்தைகளையாவது இதன் பிடியிலிருந்து மீட்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையங்களாக 48 காவல் நிலையங்கள் தேர்வு... முழு விவரம் உள்ளே !
-
பெரியாரும், அம்பேத்கரும் உரையாடும் புகைப்படம்... அம்பேத்கர் இல்லத்தை பார்வையிட்ட முதலமைச்சர்!
-
“சமூகம் மேம்பட, சங்கிகள் கதற பெரியாரியம் உலகமயம் ஆகட்டும்!” - முரசொலி தலையங்கம்!