உலகம்
“ஊரடங்கை அவசர அவசரமாக தளர்த்தினால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும்” - WHO எச்சரிக்கை! #CoronaLockdown
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால், தொற்று பரவலின் இரண்டாவது உச்சநிலையை அனைத்து நாடுகளும் சந்திக்க நேரிடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கொரோனா தொற்று சில நாடுகளில் குறைவாகப் பதிவாகி வருவதால் ஊரடங்கை தளர்த்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இதுபோன்ற அவசர நடவடிக்கை, இது கொரோனா பரவலின் தீவிரத்தை அதிகப்படுத்தும் என எச்சரிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை பிரிவு தலைவரான மைக் ரியான் தெரிவித்துள்ளதாவது :
“கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 லட்சத்தை எட்டும் நிலையில் உள்ளது. 3.40 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். சில நாடுகளில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் முற்றிலும் ஒழிந்து விடும் எனக் கருதவேண்டாம்.
கொரோனா வைரஸ் தொற்று முழுவதுமாக ஒழியாத நிலையில், அது மீண்டும் அதிகரிக்காமல் இருக்க அனைத்து நாடுகளும் கவனமாக இருக்க வேண்டும். ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால், தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே அதன் இரண்டாவது உச்சநிலையை அனைத்து நாடுகளும் சந்திக்க நேரிடும். இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள நாடுகள் பொது சுகாதாரம், கண்காணிப்பு நடவடிக்கைகள், சோதனை நடவடிக்கைகள் மற்றும் நோய் தொடர்ந்து குறைவதை உறுதி செய்வதற்கான விரிவான யுக்தியை தொடர்ந்து அமலில் வைக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!