உலகம்
“கொரோனாவிலும் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதில் பெருமையே” - அதிபர் ட்ரம்ப் பேச்சால் பரபரப்பு! #Covid19
உலக வல்லரசான அமெரிக்காவில் தற்போது 15 லட்சத்து 93 ஆயிரத்து 39 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் மட்டுமே 94 ஆயிரத்து 941 ஆக உள்ளது. இந்த பாதிப்பும் உயிரிழப்பும் உலகளவில் ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்காக உள்ளது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் மக்கள் மிகவும் திண்டாடி வருகின்றனர். லட்சக்கணக்கானோர் வேலையிழந்து அரசின் நிவாரணத்துக்காக விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பிலும் அமெரிக்கா முன்னணியில் இருப்பது பெருமையாக உள்ளது என அதிபர் ட்ரம்ப் நேற்றையை செய்தியாளர்கள் சந்திப்பின் போது வாஷிங்டனில் பேசியுள்ளார்.
ஏனெனில், அமெரிக்காவில் மட்டும்தான் அதிகபடியான பரிசோதனைகள் நடைபெறுகிறது. அதன் காரணமாகவே நாங்கள் முன்னிலையில் இருக்கிறோம். இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் பாதிப்புகளை கொண்டுள்ளது பற்றி மோசமாக பார்க்கவில்லை. ஒருவகையில் கவுரமாகதான் பார்க்கிறேன் எனக் கூறியுள்ளார்.
லட்சோப லட்ச மக்கள் கொரோனாவில் பிடியில் இருக்கும் நிலையில் அதிபர் ட்ரம்ப் இவ்வாறு பேசியிருப்பது முகச்சுழிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், உண்மையில் அமெரிக்காவில் ஒரு கோடியே 26 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!