உலகம்

கொரோனா தோல்வியை மறைக்க நிதியை வெட்டுவதா? டிரம்ப் முடிவை மறுபரீசிலையை செய்யவேண்டும்! - உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பான விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உலக சுகாதார நிறு வனத்திற்கு நிதியளிப்பதை தற்காலிகமாக நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், “உலக சுகாதார நிறுவனம் சிறந்த பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதா என்பது குறித்து எனக்கும் தனது அரசாங்கத்திற்கும் ஆழ்ந்த கவலைகள் உள்ளது. உலக சுகாதார அமைப்பு அதன் அடிப்படை கடமையில் தோல்வியுற்று உள்ளது, அதற்கு அதுவே பொறுப்பேற்க வேண்டும். அதனால் உலக சுகாதார நிறுவனத்திற்கு நிதியளிப்பதை தற்காலிகமாக நிறுத்துமாறும் உத்தரவிட்ப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

அதிபர் ட்ரம்பின் இந்த அறிவிப்பு ஐ.நாவும், உலக நாடுகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனிடையே இதுதொடர்பாக பேசிய, ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோணியா குடிரெஸ், “ உலக சுகாதார அமைப்பிற்கோ அல்லது தொற்று நோயை எதிர்த்துப் போராடும் வேறு எந்த அமைப்பிற்கோ நிதியைக் குறைப்பதற்கு இது தகுந்த நேரம் அல்ல. இந்த வைரஸையும் அதன் விளைவுகளையும் தடுக்க ஒற்றுமைக்காகவும் சர்வதேச சமூகம் ஒற்றுமையுட னும் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது” எனக் கூறியுள்ளார்.

ஆனாலும் அதன்பின்னரும் தனது நிலையை மாற்றிக்கொள்ளாத ட்ரம்ப் பலி எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகமாகுவதைப் பற்றிக் கவலைப்படாமல் ஊரடங்கைத் தளர்த்துவது குறித்து முடிவு எடுத்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் ஜெப்ரேயிசஸ், “அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிதியை அளிப்பதை நிறுத்தி வைக்க எடுத்த முடிவை மறுபரிசீலை செய்யவேண்டும். அமெரிக்கா அளித்துவந்த நிதி மற்ற நாடுகளுக்கு மட்டுமின்றி அமெரிக்காவுகும் முக்கியவத்துவம் வாய்ந்ததுதான்.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் தொற்று குறையத் தொடங்கியுள்ள நிலையில், ஆப்ரிக்கா, மத்திய அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பிய உள்ளிட்ட நாடுகளுல் வைரஸ் தொடக்க நிலையில் உள்ளது. கொரோனா நீண்ட காலம் நீடிக்கும் தொற்று எனவே அமெரிக்க நிர்வாகம் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யவேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

Also Read: உணவுக்கு கையேந்தி தெருவில் நிற்கும் அமெரிக்கா.. என்ன நடக்கப்போகிறது? #CoronaCrisis