உலகம்

அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் : சர்வதேச அவசர நிலையை அறிவித்தது WHO !

சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் நோயால் சீனாவில் மட்டும் இதுவரை 213 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மேலும், ஆயிரத்துக்கும் மேலானோர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதில் 124 பேர் சிகிச்சையின் மூலம் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: இந்தியாவுக்கு வந்தது கொடிய கொரோனா வைரஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு - தீவிர கண்காணிப்பில் 10 பேர்!

இதனிடையே, சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் உலகின் 18 நாடுகளில் பரவியுள்ளது. அதுபோல, சீனாவில் இருந்து கேரளா வந்த திருச்சூர் மாணவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தனிமைப்படுத்தப்பட்ட அந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் கூடிய உலக சுகாதார நிறுவனத்தின் கூட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை சர்வதேச மருத்துவ அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.