உலகம்
உலகின் முதல் ‘108 மெகாபிக்ஸல்’ கேமரா போன்... அறிமுகம் எப்போது? - உறுதி செய்த Mi நிறுவனம்!
குறைந்த விலையில், அதிநவீன அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வரும் ஜியோமி நிறுவனம் புதிதாக 108 மெகா பிக்ஸல் கேமரா கொண்ட போனை அறிமுகம் செய்யவுள்ளது.
வரும் நவம்பர் 5ம் தேதி சீனாவில் Mi CC9 Pro எனும் பெயரில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யப்போவதாக ஜியோமி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. Mi CC சீரிஸில் அறிமுகமாகும் மூன்றாவது போன் CC9 Pro என்பது குறிப்பிடத்தக்கது.
பென்டா கேமரா அமைப்போடு வெளிவரும் CC9 Pro ஸ்மார்ட்போனில் 108 மெகா பிக்ஸல் ப்ரைமரி கேமரா, ப்ரைமரி கேமராவுடன் ஒரு டெலி ஃபோட்டோ லென்ஸ், ஒரு அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 5 எக்ஸ் ஆப்டிகல் ஸூம் ஆகியவையும் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், CC9 Pro போன் ஆனது 6.47 இன்ச் அளவிலான Full HD + Super Amoled display, 1080*2340 பிக்சல் clarity, In-display finger print sensor,32 MP செல்ஃபி கேமரா போன்றவைகளைக் கொண்டிருக்கும்.
இந்த போன்கள் 6/8/12 ஜிபி RAM அளவுகளில் கிடைக்கும். இன்பில்ட் மெமரி 64/128/256 ஜிபி ஆகிய அளவுகளில் கிடைக்கும். 730G Qualcomm பிராஸஸரில் இயங்கும் இந்த போன் 5130mAh பேட்டரியைக் கொண்டிருப்பது சிறம்பம்சம். 30W ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் ஆதரிக்கும் என்பது கூடுதல் சிறப்பம்சம்.
சீனாவில் அறிமுகமாகும் CC9 Pro மாடல் போன், மற்ற நாடுகளில் Note 10 எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மொபைல் கேமரா பிரியர்கள், இந்த மாடல் விற்பனைக்காக இப்போதே காத்திருக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!