உலகம்
நண்பருக்காக 1300 கோடி ரூபாய் விமானத்தை இரவலாக கொடுத்த ஹாலிவுட் நடிகர்... எங்கே செல்கிறது அந்த விமானம்?
ரூபாய் 1,300 கோடி மதிப்புள்ள போயிங் ரக விமானத்தை நடிகர் ஒருவர் தனது நண்பருக்காக ‘சும்மா’ இரவலாக கொடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் ராப்பர் டிரேக். நடிகர் மட்டுமல்லாமல் பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல அவதாரங்கள் கொண்டவர் டிரேக். இவர் தனது சொந்த பயன்பாட்டிற்காக ரூபாய் 1,300 கோடி மதிப்பில் 767,300F ரக போயிங் விமானத்தை வாங்கினார்.
இந்த சொகுசு விமானத்தில் 30 இருக்கைகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தின் உள்பகுதி நட்சத்திர விடுதியைப் போல அமைந்திருப்பதாகவும், பல்வேறு சொகுசு வசதிகளுடன் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த அதிநவீன சொகுசு போயிங் விமானத்தை சாக்ரமெண்டோ கிங்ஸ் பேஸ்கட் பால் அணியினர் பயணிப்பதற்காக வழங்கியுள்ளார் டிரேக். சாக்ரமெண்டோ கிங்ஸ் அணியின் உரிமையாளர் விவேக் ரனடிவ் டிரேக்கின் நண்பர் என்பதால், அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க தனது போயிங் விமானத்தை வழங்கியுள்ளார் டிரேக்.
சாக்ரமெண்டோ கிங்ஸ் அணியினர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக, 20 மணி நேரம் இந்த சொகுசு விமானத்தில் பயணிக்கவிருக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக உயர்ந்த விலைக்கு, தனது விருப்பத்திற்கேற்ப பார்த்துப் பார்த்து உருவாக்கிய விமானத்தை தனது நண்பர் கேட்டுக்கொண்டதற்காக விலையில்லா வாடகைக்கு கொடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!