உலகம்
டர்பன் நிறத்துக்கு மேட்சிங்காக 20 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் - இப்படியும் ஒரு இந்தியத் தொழிலதிபரா.. ?
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் ரூபன் சிங், இங்கிலாந்தில் வசித்து வருகிறார். மிகப்பெரும் பில்லியனரான ரூபன் சிங், அங்கு ‘பிரிட்டிஷ் பில்கேட்ஸ்’ என்றே அழைக்கப்படுகிறார். இவர் குறித்த சுவாரஸ்யத்திற்குக் காரணம் இவர் மிகப்பெரும் பணக்காரர் என்பது மட்டுமல்ல.
ரூபன் சிங்குக்கு கார்கள் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. தனக்குப் பிடித்திருந்தால், தேவைப்படுகிறதோ இல்லையோ கார்களை வாங்கிக் குவித்துவிடுவது இவரது வழக்கம். ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துக்கு உலகில் இருக்கும் வாடிக்கையாளர்களில் மிகமுக்கியமானவர் இவர் தான்.
எந்த அளவுக்கென்றால், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ-வே ரூபன் சிங்கின் வீட்டுக்கு வந்து கார்களை டெலிவரி செய்யும் அளவுக்கு. வெவ்வேறு நிறங்களில் ஒரே ரக கார்களையும் வாங்கி தனது கார் பார்க்கிங்கை அழகுபடுத்தியிருக்கிறார் ரூபன் சிங். வெறித்தனமான கார் பிரியரான இவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கார் மட்டுமே கிட்டத்தட்ட 20 இருக்கிறதாம்.
ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு மட்டுமல்ல, Bugatti, Porche, Pagani, Lamborghini, Ferrari உள்ளிட்ட கார்களுக்கும் இவர் ரசிகர். மேற்குறிப்பிட்ட மிக விலை உயர்ந்த கார் நிறுவனங்களின் குறிப்பிட்ட சில ரகங்கள் இவரிடம் மட்டுமே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரூபன் சிங், தனது 22வது வயதில், தனது நிறுவனம் ஒன்றை மிகப்பெரும் தொகைக்கு விற்றுப் பிரபலமானார். தொழில்துறையில் ஜாம்பவனாகத் திகழும் இவரை இங்கிலாந்தின் அப்போதைய பிரதமர் டோனி ப்ளேர், இங்கிலாந்து அரசின் வணிகத் துறைக்கு ஆலோசகராகவும் நியமித்து கௌரவித்தார்.
தற்போதும், பல நிறுவனங்களில் இயக்குநராகவும், தொழில் கூட்டாளியாகவும் இருந்து வருகிறார் ரூபன் சிங். கார்கள் வாங்குவதற்காகவே ரூபன் சிங் பல கோடிகளை இதுவரை செலவழித்தும், கார் வாங்கும் ஆசை மட்டும் இன்னும் தீர்ந்தபாடில்லையாம்.
Also Read
-
உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண்... நீதிபதிகள் நியமனத்தில் பாகுபாடு என புகார் !
-
விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !
-
ஜெகதீப் தன்கரின் அரசு இல்லத்தை காலி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு... புதிய வீடு ஒதுக்கப்படாததால் அதிர்ச்சி !
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !