உலகம்

“இந்தியர்களுக்கு, உணவு இல்லை” - இந்திய உணவகத்தில் இந்தியர்களுக்கே உணவு மறுக்கப்பட்ட சம்பவம்

அயர்லாந்தில் டர்பன் பகுதியில் ‘ரவிஸ் கிச்சன்’ எனும் இந்திய உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்திய உணவுகளுக்கு புகழ் பெற்றது இந்த உணவகம்.

இந்த ஓட்டலுக்கு அங்கு வசிக்கும் இந்தியரான மயங்க் பட்நாகர் என்பவர் வேலை முடித்து நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு அவர்களிடம் ஆர்டர் எடுக்க யாரும் வரவில்லை. என்ன வேண்டும் என எதுவும் கேட்காமல் கண்டுக்கொள்ளாமல் உணவக ஊழியர்கள் இருந்திருக்கின்றனர்.

இதனால் விரக்த்தியடைந்த மயங்க், அங்கு இருந்த பெண் ஊழியரிடம், “ஏன் எங்கள் ஆர்டர்களை கேட்க வரவில்லை” என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த பெண் ஊழியர், “நீங்கள் இந்தியர்கள், உங்களுக்கு உணவு கிடையாது” என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மயங்க், அயர்லாந்த் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது.

உணவகம் மீது உள்ள தகவறுகளை சுட்டிக்காட்டி, உணவு வழங்காததால் 3 ஆயிரம் யூரோ அதாவது இந்திய மத்திப்பில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 533 ரூபாய் அபராத தொகையை மயங்க் பட்நாகருக்கு, ரவிஸ் கிச்சன் நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.