உலகம்
“முடிந்ததைச் செய்கிறேன்” : காஷ்மீர் விவகாரத்தில் மீண்டும் மீண்டும் மத்தியஸ்தம் பேசத் துடிக்கும் ட்ரம்ப்!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு சட்டப்பிரிவுகளை ரத்து செய்தும், ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தும் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.
மோடி அரசின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்குப் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. காஷ்மீர் பிரச்னையை சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு சென்றது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதனையடுத்து காஷ்மீர் விவகாரம் குறித்து இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகிய இருவரிடமும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசியில் பேசினார். மேலும் காஷ்மீர் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ட்ரம்ப் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் மீண்டும் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, என்.பி.சி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ட்ரம்ப், “காஷ்மீர் நீண்டகாலமாக பிரச்னைக்குரிய இடமாகவே இருந்து வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய முயற்சித்து வருகிறேன். இரு நாடுகள் இடையே மிகப்பெரிய பிரச்னைகள் உள்ளன.
இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இணைந்து வாழ விருப்பம் இல்லாத பகுதியாக காஷ்மீர் உள்ளது. காஷ்மீர் பிரச்னையில் சுமுக தீர்வு என்பது இயலாத காரியம். இரு நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்யவோ அல்லது என்னால் முடிந்த உதவிகளைச் செய்யவோ தயாராக இருக்கிறேன்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!