உலகம்
அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லையில் பேராசிரியர்கள் செய்த செயல் : இருநாட்டு மக்களும் நெகிழ்ச்சி! (Video)
அமெரிக்காவுக்கும், மெக்ஸிகோவுக்கும் இடையே எல்லைச் சுவர் எழுப்ப வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருந்து வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். சுமார் 2,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுவர் எழுப்பப்படும் இந்தத் திட்டத்திற்கு 40,540 கோடி ரூபாய் நிதி தேவைப்படும் எனவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இந்த திட்டத்திற்கு அமெரிக்க மக்கள் பலரும் எதிர்த்து வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் இந்த திட்டத்தை ஒப்புக்கொள்ளாத நிலையில், பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு ட்ரம்ப் இதற்கான நிதியைப் பெற்றார். தற்போது இருநாட்டு எல்லைப் பகுதிகளில் சுவர் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கலிஃபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரொனால்ட் ரஃபேல், சான் ஜோஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஃப்ராடெல்லோ ஆகியோர் இணைந்து ட்ரம்ப்பின் நோக்கத்தைப் பகடி செய்யும் வகையில் ஒன்றைச் செய்திருக்கிறார்கள்.
அமெரிக்காவையும், மெக்ஸிகோவையும் பிரிக்கும் எல்லைப்பகுதியில் உள்ள கம்பியாலான சுவருக்கு இடையே ‘சீசா’ (SeeSaw) எனப்படும் விளையாட்டு சாதனத்தை அமைத்திருக்கிறார்கள். அதில் ஒருபக்கம் மெக்ஸிக்கர்களும், மறுபக்கம் அமெரிக்கர்களும் அமர்ந்து ‘சீசா’ விளையாடும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த விளையாட்டு அமெரிக்கர்களுக்கும், மெக்ஸிக்கர்களுக்கும் உள்ள சகோதரத்துவத்தை வெளிப்படுத்துவதாக பலர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்துப் பேசிய பேராசிரியர் ஃப்ராடெல்லோ, "இந்த முயற்சியை மக்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டுள்ளனர். ஒருமுனையில் நிகழும் செயலின் தாக்கம் மறுமுனையில் தெரியும் என்பதே சீசா விளையாட்டின் தத்துவம். அந்தத் தத்துவம் தற்போது அமெரிக்கா - மெக்ஸிகோ நாடுகளுக்கான உறவுக்கும் பொருந்தும்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !