உலகம்

விடுதலை ஆவாரா குல்பூஷன் ஜாதவ்? சர்வதேச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு !

இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ் இந்தியாவின் உளவு அமைப்பான ரா-விற்கு உளவு பார்த்ததாக கூறி கடந்த 2016ம் ஆண்டு பலுசிஸ்தானில் பாகிஸ்தாண் கைது செய்தது. ஈரானில் இருந்து உலவுப் பார்க்க தங்கள் நாட்டுக்குள் நுழைந்ததாக கூறி பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. இதையடுத்து, அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

அதனை எதிர்த்து நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த இந்தியா, ஈரானுக்கு தொழில் விஷயமாக சென்ற குல்பூஷண் அங்கிருந்து கடத்தப்பட்டதாக வாதிட்டது. மேலும் இந்த வழக்கு சம்பந்தமான விசாரணை நடந்து வந்ததால் மரண தண்டனையை நிறுத்தி வைக்க இந்தியா இடைக்கால தடை பெற்றது.

இந்த வழக்கு தொடர்பாக இருதரப்பிலும் மனுக்கள் மற்றும் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி முதல் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு ஜூலை 17ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.