Viral
'ஜன்னலோர சீட் வேண்டும்' : வந்தே பாரத் ரயிலில் பயணியை தாக்கி ரவுடி போல் நடந்து கொண்ட பாஜக MLA !
டெல்லியில் இருந்து போபாலுக்கு வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் சிங் தனது குடும்பத்துடன் பயணம் செய்துள்ளார்.
இந்நிலையில், தனக்கு ஒதுக்கப்பட்ட ஜன்னலோர இருக்கையில் பயணி ஒருவர் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது ராஜீ சிங் அந்த பயணியிடம், தனக்கு ஜன்னலோர இருக்கை வழங்க வேண்டும் என கேட்டுள்ளார்.
இதற்கு அந்த பயணி மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆவேசமடைந்த எம்எல்ஏ சிலருக்கு தொலைபேசியில் இது குறித்து தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் ரயில், ஜான்னி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது. அப்போது ஒரு கும்பல் ரயிலில் ஏறி, எம்எல்ஏவுக்கு ஜன்னலோர இருக்கை தரமறுத்த பயணியை சரமாறியாக தாக்கியது. இதில் அவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.இதைப்பார்த்து சக பயணிகள் அச்சமடைந்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினரே இப்படி மக்களை தாக்கி ரவுடி போல் நடந்து கொள்ளலாமா? அவர் ரவுடியா அல்லது எம்எல்ஏவா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி பா.ஜ.க எம்எல்ஏவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
5 கி.மீ தூரம் நடைபயணம் : தமிழ் வெல்லும்' - கலைஞர் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !