Viral
“அங்கன்வாடியில் பிரியாணியும் பொறிச்ச கோழியும் வேணும்.. ”-கேரள சிறுவன் கோரிக்கைக்கு அமைச்சரின் ரியாக்ஷன்?
கேரள மாநிலத்தில் பல்வேறு அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் குழந்தைகளுக்கு அரசு சார்பில் சத்தான உணவும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சூழலில் சிறுவன் ஒருவன் தனது உப்புமா வேண்டாம் என்றும், பிரியாணியும், பொறிச்ச கோழியும் வேண்டும் என்று கேட்டுள்ளது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஷங்கு என்ற பெயர் கொண்ட சிறுவன், தனது வீட்டில் உணவு சாப்பிடும்போது, தனது அம்மாவிடம் தனக்கு அங்கன்வாடியில் உப்புமா வேண்டாம் என்றும், பிரியாணியும், பொறிச்ச கோழியும் வேண்டும் என்றும் பேசியுள்ளார். சிறுவன் தனது மழலை மொழியில் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்த விவகாரம் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வரை சென்றது.
இதையடுத்து சிறுவனின் காணொளியில் எதிரொலியாக, அரசு கொடுக்கும் உணவு வகைகள் குறித்து மீண்டும் பரிசீலனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், "குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை உறுதி செய்வதற்காகவே அங்கன்வாடிகளில் அனைத்து விதமான உணவுகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரசாங்கத்தின் கீழ் அங்கன்வாடிகளில் முட்டை மற்றும் பால் வழங்கும் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அங்கன்வாடிகளில் பல்வேறு வகையான உணவுகள் என்பது வழங்கப்பட்டு வருகிறது. அந்த சிறுவனின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும்" என்றார்.வதாக தெரிவித்துள்ளார். வீட்டில் பிரியாணி சாப்பிடும் போது குழந்தை அப்பாவித்தனமாக வைத்த கோரிக்கையை அவருடைய தாய் பார்க்க அழகாக இருந்ததால் இன்ஸ்டாகிராமில் பதிவிட தற்போது அது அரசாங்கத்தின் கவனத்திற்கு சென்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!