Viral
தினமும் குளிக்காத கணவன் : மனைவி எடுத்த எதிரடி முடிவு - நடந்தது என்ன?
வரதட்சணை, துன்புறுத்தல் போன்ற காரணங்களால் விவாகரத்து கோரி நீதிமன்றம் செல்வதை நாம் பார்த்து இருப்போம். ஆனால் உத்தர பிரதேசத்தில் கணவன் குளிக்காததால் மனைவி நீதிமன்றம் நாடியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், ஆக்ரா பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இவர் தினமும் குளிக்காமல் இருந்துள்ளார். இதனால் கணவர் அருகே வரும்போது எல்லாம் துர்நாற்றம் அடிப்பதாக கூறியுள்ளார் மனைவி.
இருந்தும் இவர் மனைவியின் கட்டாயத்தில் திருமணம் நடந்த 40 நாட்களில் 6 முறை மட்டுமே குளித்துள்ளார். மேலும் வாரம் ஒருமுறை கங்கை நீரை உடலில் தெளித்துக் கொண்டு இது புனிதம் என கூறிவந்துள்ளார்.
எவ்வளவு சொல்லியும் கணவன் குளிக்காமல் இருந்ததால் மனைவி நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவரையும் ஒருவாத்திற்கு ஆலோசனை மையத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர்.
கணவர் குளிக்காததால் விவாகரத்துக் கோரும் மனைவி நீதிமன்றம் சென்றுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது!” : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!
-
ரோடு ஷோ - தமிழ்நாடு அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
-
பீகார் தேர்தல் - குளறுபடிகளுக்கு இடையே நிறைவடைந்த முதற்கட்ட வாக்குப்பதிவு! : 2ஆம் கட்டத் தேர்தல் எப்போது?
-
”NDA கூட்டணி அரசை பீகார் மக்கள் தூக்கி எறிவார்கள்” : பரப்புரையில் பிரியங்கா காந்தி MP பேச்சு!
-
தமிழ்நாடு முழுவதும் நவ.11 அன்று SIR-க்கு எதிராக ஆர்ப்பாட்டம்! : மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!