Viral
எல்லாமே கரெக்ட்டு... மாணவர்களின் விடைத்தாளை சரிபார்க்காமல் திருத்திய பேராசிரியை... Reels வைரல்!
பாஜக கூட்டணி ஆளும் மாநிலமான பீகாரில் மாணவர்களின் விடைத்தாளை சரிபார்க்காமல், அனைத்திற்கும் சரி என்று டிக் செய்யும் பேராசிரியை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பீகாரில் அமைந்துள்ளது பாடலிபுத்திரா பல்கலைக்கழகம் (PPU). இந்த பல்கலைக்கழகங்களுக்கு கீழ் பல கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.
இந்த சூழலில் இங்கு இருக்கும் கல்லூரி ஒன்றில் பேராசிரியர்கள், மாணவர்களின் விடைத்தாளை திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பாட்னா கல்லூரி ஒன்றில் சில பேராசிரியர்கள் விடைத்தாளை திருத்தி வந்தனர். அப்போது அதில் ஒரு பேராசிரியை, மாணவர்களின் விடைத்தாள்களை சரி பார்க்காமல் உடனுக்குடன் திருத்தி வந்துள்ளார்.
அதாவது மாணவர்களின் விடைகள் சரியாக இருக்கிறதா? அதில் ஏதாவது பிழை இருக்கிறதா? என்று எதையும் ஆராயாமல் அடுத்தடுத்து என்று தாள்களை திருப்பி அனைத்திற்கும் சரி என்று திருத்திவிட்டு, முன்பக்கத்தில் மார்க் போட்டுள்ளார். மேலும் இதனை அவரே ரீல்ஸ்-ஆகவும் எடுத்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து இந்த சம்பவத்துக்கு பலர் மத்தியிலும் கண்டனங்கள் எழுந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். இதையடுத்து தற்போது அந்த பேராசிரியை மீது போலீசார் FIR பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த பேராசிரியை குறித்த விவரங்கள் எதுவும் போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டனாங்கள் குவிந்து வருகிறது.
Also Read
-
“மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் அரசு” : நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு!
-
“கல்வியே திராவிட மாடல் அரசின் மூலதனம்” : 'உலகம் உங்கள் கையில்' விழாவில் நடிகர் மணிகண்டன் பேச்சு!
-
“உலகம் உங்கள் கையில்” : மாணவர்களுக்கு டிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
உலகம் உங்கள் கையில் : மாணவர்களுக்காக 40 அரங்குகளுடன் தொழில்நுட்பக் கண்காட்சி தொடக்கம்.. எங்கு? - விவரம்!
-
விளையாட்டு பயிற்றுநர் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பயன்பாடு தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!