Viral
வீலிங் செய்ததால் நேர்ந்த விபத்து.. சுக்குநூறாய் நொறுங்கிய பைக்.. மருத்துவமனையில் TTF வாசன்!
கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள முத்துக்கல்லூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் TTF வாசன். இவர் இருசக்கர வாகனத்தில் ஊர் ஊராகப் பணம் செய்து தனது அனுபவங்களை யூடியூபில் பதிவேற்றி வெளியிட்டு வருகிறார். இவரின் Twin Throttlers என்ற யூடியூப் பக்கத்திற்கு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். மேலும் இவருக்கு இந்த வீடியோக்கள் மூலம் ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.
பைக்கிலே ஊர் ஊராக சுற்றி அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டு வருவார். மேலும் இவர் பைக் ரேசர் என்பதால் தனது பைக்கில் அதிவேகமாகச் செல்லுவது போன்ற வீடியோக்களையும் பதிவிட்டு வருவார். பப்ளிசிட்டிக்காக இவர் செய்யும் அட்ராசிட்டிகளால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
இவர் அதிவேகமாக பைக்கை ஓட்டுவதற்கு போலிஸார் வழக்குப் பதிவு செய்து எச்சரிக்கை விடுத்தாலும், மீண்டும் மீண்டும் வேகமாகவே பைக்கை ஓட்டி வருகிறார். இவர் இப்படி பைக் ஓட்டுவதைப் பார்த்து விட்டு இளைஞர்கள் பலரும் வேகமாக பைக் ஓட்டி விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.
இந்நிலையில் சென்னையிலிருந்து மகாராஷ்டிராவிற்கு ரூ.35 லட்சம் விலை உயர்ந்த SUZUKI நிறுவனத்தைச் சேர்ந்த இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் அருகே சென்றபோது வீலிங் செய்துள்ளார். அப்போது நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளார். இதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் ஓட்டிவந்த வாகனமும் சுக்கு நூறாக நொறுங்கியது.
பின்னர் அவரை மீட்டு காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சென்னைக்கு TTF வாசன் அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் TTF வாசன் வீலிங் செய்தபோது விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து சாலையில் கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டுதல் உள்ளிட்ட இரு பிரிவுகளில் போலிஸார் TTF வாசன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Also Read
-
“தி.மு.க படிக்க வைக்கும்” : மாணவர் பாரதிதாசனுக்காக குரல் கொடுத்த மு.க.ஸ்டாலின்!
-
சமூகநீதி நாளில் சமூக அநீதி : மாணவர் பாரதிதாசனுக்கு நெருக்கடி தருவது கேவலத்தின் உச்சம் - உதயநிதி ஆவேசம்!
-
லண்டன் பயணம் : செய்தியாளர்களைச் சந்திக்காமல் சென்ற முதலமைச்சர் விஜய்!
-
மும்மொழி திட்டத்தைக் கைவிட வேண்டும் : ஒன்றிய அரசுக்கு, உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது என்ன?
-
தமிழ்நாட்டில் தொடர்கதையாகும் விலைவாசி உயர்வு! - த.வெ.க.வின் நிர்வாகத் தோல்விக்கு எழும் கண்டனங்கள்!