Viral
சுற்றித்திரிந்த நோய்வாய்ப்பட்ட சிறுத்தை.. சவாரி செய்ய முயன்ற கிராம மக்கள்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி !
பொதுவாக புலி, சிங்கம் போன்ற காட்டு விலங்குகளுக்கு மக்கள் பயப்படுவது வழக்கம். சிலர் அதனை வேட்டையாடி மகிழ்வர். அதனாலே இந்தியாவில் விலங்குகளை பாதுகாக்கும் சட்டமும் நடைமுறையில் உள்ளது. அதன்படி விலங்குகளுக்கு மக்கள் தொந்தரவோ, வேட்டையாடவோ செய்ய கூடாது என்று விதி உள்ளது.
ஆனால் இங்கு ஒரு கிராம மக்கள் நோய்வாய் பட்டுள்ள சிறுத்தை ஒன்றை தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் என்ற பகுதியில் இக்ரேலா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதி அருகே இருக்கும் வனப்பகுதியில் பல்வேறு விலங்குகள் சுற்றி திரிந்த வண்ணமாக இருக்கிறது.
அந்த வகையில் அங்கு சிறுத்தைகளும் உலாவி வருகிறது. இந்த சூழலில் அண்மையில் சிறுத்தை ஒன்று அந்த வனப்பகுதியில் அமைதியாக வலம் வந்துள்ளது. யாரையும் தொந்தரவு செய்யாமல் அமைதியாக இருந்துள்ளது. இதனை கண்ட உள்ளூர் வாசிகள் அந்த சிறுத்தையை பார்வையிட வந்துள்ளனர். அவ்வாறு வந்த மக்களை அந்த சிறுத்தை எதுவும் செய்யாமல் இருந்ததால், அவர்கள் சிறுத்தையிடம் விளையாடினர்.
மேலும் அந்த சிறுத்தையுடன் செல்ஃபி எடுத்து தொந்தரவு செய்து அதன் மீது சவாரி செய்யவும் முயன்றுள்ளனர். மேலும் இதனை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். சிறுத்தை மிகவும் சோர்ந்து காணப்பட்ட போதிலும் அந்த மக்கள் அதனை விடவில்லை. இதையடுத்து இந்த சிறுத்தை குறித்து அங்கிருந்த ஒருவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் சிறுத்தையை பத்திரமாக மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வெறும் இரண்டு வயதே ஆன அந்த சிறுத்தைக்கு உடல்நிலை மிகவும் மோசகமாக இருப்பதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய்வாய்ப்பட்டுள்ள சிறுத்தையை கிராமமே சேர்ந்து தொந்தரவு செய்து, அதன்மீது சவாரி செய்ய முயன்றுள்ள சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி விலங்குகள் ஆர்வலர்கள் மத்தியில் கண்டனங்களை எழுப்பி வருகிறது.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!