Viral
ரூ.5 ஆயிரம் லஞ்சம்.. கையும் களவுமாக பிடிபட்ட போது பணத்தை வாயில் போட்டு கடித்துத் தின்ற அதிகாரி!
மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் மாவட்டத்தில் வருவாய்த் துறை அதிகாரியாக இருப்பவர் கஜேந்திர சிங். இவரை பர்கோடா கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் வேலை தொடர்பாக அணுகியுள்ளார்.
அப்போது கஜேந்திர சிங், ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர் இது தொடர்பாக லோக் ஆயுக்தா சிறப்பு போலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து வருவாய்த் துறை அதிகாரியை கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர். அதன்படி அந்த நபரிடம் ரூ. 5 ஆயிரம் பணத்தைக் கொடுக்கும் படி கூறியுள்ளனர்.
இதேபோன்று வருவாய்த் துறை அதிகாரியிடம் ரூ. 5 ஆயிரம் பணத்தைக் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த போலிஸார் சுற்றிவளைத்தனர். இங்கு போலிஸார் இருப்பதை அறிந்த கஜேந்திர சிங் உடனே பணத்தை வாயில் போட்டுத் தின்று விழுங்கியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலிஸார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் விழுங்கிய பணம் வெளியே எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியது VB-G RAM G முன் வடிவு!” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!