Viral
ஏ.. ச்சூ.. ஓடு.. சிங்கத்தையே கல்லால் அடித்து விரட்டிய இளைஞர்.. நடந்தது என்ன ? வைரலாகும் VIDEO !
காட்டுக்கே ராஜா என்று சொல்லப்படுவது தான் சிங்கம். சிங்கம் என்றாலே மூர்க்கத்தனமான ஒரு விலங்காக பார்க்கப்படும் நிலையில், இதனை சில உயிரியல் பூங்காவில் கூட வைத்திருக்க அஞ்சப்படும் ஒரு மிருகமாக பார்க்கப்டுகிறது. மிருக இனங்களே அஞ்சும் நிலையில், இளைஞர் ஒருவர் அதனை கல்லால் விரட்டியடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம் ஜுனாகத் கேஷோத் நகரின் கவுன்சிலர் விவேக் கொட்டாடியா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குஜராத்தில் உள்ள கிர் சோம்நாத் பகுதில் அமைந்துள்ளது அலிதார் என்ற கிராமம். இங்கு பெண் சிங்கம் ஒன்று பசு மட்டை கடித்து இழுக்கிறது. பசுவின் தாடையை அந்த பெண் சிங்கம் கடித்து இழுக்கிறது.
இதனால் அந்த பசுவும் கத்துகிறது. அப்போது அங்கே வந்த விவசாய இளைஞர் ஒருவர் அந்த சிங்கத்தை விரட்டுவதற்கு சத்தம் கொடுத்து வருகிறார். எனினும் அந்த பசுவை சிங்கம் விடாமல் பிடித்து இழுத்துக்கொண்டே இருந்தது. இதனால் அந்த இளைஞர் அருகில் இருந்த கல்லை கொண்டு அந்த சிங்கத்தை நோக்கி வீசினார். இதையடுத்தே அந்த சிங்கம், பசு மாட்டை விட்டு அங்கிருந்த புதருக்குள் ஓடியது.
விவசாய இளைஞர் ஒருவர் பெண் சிங்கத்தை விரட்டியடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பசுவை கடித்து இழுத்த சிங்கத்தை விவசாய இளைஞர் ஒருவர் கல்லால் அடித்து விரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது பாராட்டுகளையும் கவனத்தையும் பெற்று வருகிறது.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!