Viral

நடு ரோட்டில் நடனம்.. தனியாக சென்றால் கொலை.. இணையத்தில் வைரலாகும் ‘Serbian Dancing Lady’.. பின்னணி என்ன ?

கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது செர்பியா. இங்கு பெண் ஒருவர் நடு ரோட்டில் நடமாடுவது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரையும் பயமுறுத்தும் வகையில் உள்ளது. ஏனெனில் இந்த வீடியோவில் அந்த பெண் நள்ளிரவு நேரத்தில் முகத்தை மறைத்துவிட்டு பெரிய ஆடை அணிந்து நடு ரோட்டில் ஆடுகிறார். இதனை பார்த்து பலரும் பயந்துள்ளனர்.

தற்போது இணையத்தில் பேசு பொருளாக இருக்கும் இந்த வீடியோ குறித்த பின்னணி குறித்து இதில் பாப்போம். இந்த வீடியோவானது செர்பியாவில் எடுக்கப்பட்டது. இது கடந்த 2019-லியே வெளியானது. இது முதன் முதலில் செர்பியாவின் ஊடகம் ஒன்றில் வெளியானது. அதன்பிறகே இது பெரிய பேசுபொருளாக மாறியது.

இந்த வீடியோவில் இருக்கும் மர்ம பெண் யாரும் இல்லாத நேரத்தில் நடு ரோட்டில் இருந்து நடனமாடுகிறார். பின்னர் அந்த வழியே யாரேனும் வந்தால் அவர்களை தான் வைத்திருக்கும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குகிறார். இது தொடர்ந்து பல மாதங்கள் நிகழ்வே இது குறித்த செய்திகள் வெளியானது. அதோடு இதுகுறித்து போலிஸும் வழக்குப்பதிவு செய்து விசாரித்தது.

அப்போது அந்த மர்ம பெண் குறித்த எந்த தகவலும் தெரியவரவில்லை. மேலும் அந்த மர்ம பெண் குறித்து சில பகுதி மக்களும் புகார் அளித்தனர். இந்த மர்ம பெண், தனியே வருபவர்களை தாக்கி கொலை செய்து வந்தார். ஒரு முறை கர்ப்பிணி பெண்ணையும் இரக்கம் இன்றி தாக்கினார். இதனால் போலீஸ் இரவு நேரத்தில் தனியாக யாரும் வெளியே வர வேண்டாம் என்று பொதுமக்களை அறிவுறுத்தினர்.

மேலும் இதற்காக தனிப்படை அமைத்து அந்த பெண் குறித்து தேடி வந்தனர். எனினும் அவர் குறித்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. மாறாக அவர் கருப்பு உடை, முகத்தில் மாஸ்க், நீண்ட கருமையான முடி, கோரமான கண்கள், வெளிறிய நிறம் உள்ளிட்ட அடையாளங்கள் மட்டுமே தெரியவந்தது. அதுவும் நிகழ்வு நடந்த இடத்திற்கு சென்று அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளும்போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறியப்பட்டது.

இதனிடையே ஒரு கும்பல் இதனை prank எனவும், போலி எனவும் சில செய்திகளும் வெளியாகின. மற்றொரு கும்பல் இது ஒரு பேய் என்றும் புரளியை கிளப்பியது. ஆனால் போலீசோ, இது ஒரு சைக்கோ நபர் என்று கூறியதோடு இந்த செர்பியன் லேடி குறித்து தொடர்ந்து பொதுமக்களை எச்சரித்தும், விசாரித்தும் வந்தனர். இது தொடர்பான வீடியோ அப்போதே வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. இருப்பினும் அந்த நபர் பெண்ணா, ஆணா என்பது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

தற்போது அந்த பெண் உயிரோடு இருக்கிறாரா அல்லது இறந்து விட்டாரா அல்லது இப்போது எந்த இடத்தில் உள்ளார் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இப்போதும் கூட இந்த செர்பியன் லேடி என்பது உண்மையா பொய்யா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. சில காலங்கள் கழித்து அந்த மக்களும் இதனை மறந்து நிம்மதியாக இருந்து வருகின்றனர்.

இந்த சூழலில் தற்போது இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் நபர் ஒருவர் இந்த வீடியோவை தனது டிக்டாக் பக்கத்தில் Serbian dancing lady என்ற பெயரில் வெளியிட்டிருந்தார். அதன்பிறகு சில நாட்கள் கழித்து அதனை நீக்கினார். இருப்பினும் அந்த வீடியோ மீண்டும் சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

இது வைரலானதை அடுத்து தற்போது பலரும் கிண்டலடித்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அதாவது அந்த வீடியோவில் அந்த பெண் ஆடியது போல், பெண்கள், ஆண்கள், பெரியவர்கள் என பலரும் ஆடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இதுவும் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பேருந்தில் சீட் பிடிக்கும் போது நடந்த விபரீதம்.. 30 சவரன் நகை திருட்டு: குற்றவாளியை காட்டி கொடுத்த CCTV!