Viral
துப்பாக்கியால் சுட்ட 4 முறை மணமகள்.. பீதியில் உறைந்து போன மணமகன்.. மிரளவிடும் வீடியோவால் போலிசார் செக் !
பொதுவாக அன்றைய காலத்து திருமணத்தில் எல்லாம் மணமக்கள் சாதாரணமாகவே போட்டோவுக்கு போஸ் கொடுப்பர். ஆனால் காலம் மாற மாற, அனைத்தும் மாறியது. இப்போது எல்லாம் மணமக்கள் ப்ரீ-வெட்டிங் போட்டோ என்று எடுக்கின்றனர்.
அதுமட்டுமின்றி மணமேடைகளிலும் வித்தியாசமாக போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக்கொள்கின்றனர். இதுபோன்ற விஷயங்களால் பல விபரீதங்கள் நேர்கிறது. குறிப்பாக சொல்லச்சொன்னால், திருமணம் முடிந்து மணமக்கள் கேக் வெட்டும்போது அருகில் இருந்த நண்பர்கள் ஸ்பிரே அடிக்கையில், திடீரென தீப்பற்றியது என்று பல கூறலாம்.
போட்டோ ஷூட் மட்டுமின்றி, சிலர் சம்பிரதாயம் என்ற பெயரிலும் வினோத விஷயங்களை செய்து வருவர். மேலும் சிலர் வித்தியாசமான சாகசமாக போட்டோ எடுக்க விரும்பி அது விபரீதத்தில் முடிந்த கதையும் உண்டு. அது போல் ஒரு சம்பவத்தின் தொடர்பான வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தர பிரதேச மாநில ஹத்ராஸ் பகுதியில் மணமக்களுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது மணமக்கள் இருந்தவரும் மாலை மாற்றி கொண்டனர். பின்னர் அவர்கள் மேடையில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்திருக்கவே, மணமகள் அருகில் கருப்பு உடை அணிந்த நபர் ஒருவர் இருக்கிறார். சிறிது நேரத்தில் அந்த நபர் தான் மடியில் வைத்திருந்த துப்பாக்கியை மணமகளிடம் கொடுக்கிறார்.
அதனை வாங்கிய மணமகள், துப்பாக்கியால் வானோக்கி 5 நொடிகளில் 4 முறை சுட்டார். மணமகள் சுடுவதை தெரிந்துகொண்ட மணமகன் பெரும் பீதியில் இருந்தார். மேலும் மணமக்கள் குடும்பம் உட்பட அங்கிருந்த அனைவரும் இந்த சம்பவத்தால் பெரும் பயத்தில் காணப்பட்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது கண்டனங்களையும் எழுப்பியது.
அதோடு இதுகுறித்த கவனம் போலீசுக்கும் சென்றது. இதைதொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அந்த பெண் மீது இந்த நிகழ்வுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் துப்பாக்கி கொடுத்த நபர் அடையாளம் காணப்பட்டதாகவும், விரைவில் மணமகள் குடும்பத்தாரிடம் இந்த நிகழ்வு குறித்து விசாரணை மேற்கொள்ளல் உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இதே போல், மணமக்கள் போட்டோவுக்கு பொம்மை துப்பாக்கியை வைத்து போஸ் கொடுத்தபோது, அதில் இருந்து வந்த தீப்பொறி மணமகள் மீது பட்டுள்ளது தொடர்பான வீடியோ வைரலானது. தற்போது நிஜ துப்பாக்கியை வைத்து மணமகள் சுட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"கேள்வி கேட்பது தேசத்துரோகமாக கருதப்பட்டால் ஜனநாயகம் இருக்காது" - பாஜக அரசுக்கு முதலமைச்சர் கண்டனம் !
-
"ஆளுநர்கள் மசோதாக்கள் மீது தங்களது தனி விருப்பத்தை பயன்படுத்துகின்றனர்" - உச்சநீதிமன்றம் அதிருப்தி !