Viral

UBER ஓட்டுநரிடம் இருந்து வந்த ஒரே SMS.. உடனே CANCEL செய்த பெண் பயணி. என்ன அனுப்பினார் தெரியுமா ? VIRAL

தற்போதுள்ள காலகட்டத்தில் போக்குவரத்து என்பது அத்தியாவசியமாக அமைந்துள்ளது. எதோ ஒரு பகுதியில் இருந்து ஆட்டோவிற்கும், வாடகை காரிற்கும், பேருந்திற்கும் கால்கடுக்க காத்துக் கிடக்க வேண்டிய நிலைமை எல்லாம் தற்போது இல்லை.

எந்த பக்கம் திரும்பினாலும் மொபைல் போன், ஆப்ஸ் என வளர்ச்சி அடைந்து காணப்படுகிறது. இப்படி ஒரு கிளிக் செய்தால், இருந்த இடம் தேடி சாப்பாடு கூட வரும். சிலர் தங்கள் பயண வசதிக்கு ஏற்ப கேப்ஸ், ஆட்டோ என பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான், வாடகை வண்டியை புக் செய்யக்கூடிய ஆப்ஸ்.

UBER, OLA போன்ற ஒன`ஆப்கள் மூலம் ஆன்லைன் மூலம் புக் செய்து நாம் இருக்கும் இடத்திற்கு வாகனம் வந்து நிற்கும். இது போன்றவற்றை சென்னை, மும்பை போன்ற மாநகரங்களில் பயன்படுத்தவர் வழக்கம். அந்த வகையில் பெங்களுருவில் பலரும் இதனை பயன்படுத்தி வருகின்றனர். அப்படி ஒரு பயணி புக் செய்தபோது தான் சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களுருவில் வசிக்கும் பெண் ஒருவர் UBER கேபை புக் செய்துள்ளார். அப்போது உடனே ஓட்டுனர் அவருக்கு ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார். பாரத் என்ற ஓட்டுநர் தன்னை புக் செய்த பெண்ணுக்கு ' தயவு செய்து ட்ரிப்பை நீங்களே கேன்சல் செய்துவிடுங்கள்.. நான் தூக்க கலக்கத்தில் உள்ளேன்' என்று அனுப்பியுள்ளார்.

அந்த பயணியும் மறுபேச்சு பேசாமல் ட்ரிப்பை கேன்சல் செய்துள்ளார். இது தொடர்பான சாட்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் ஓட்டுநருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஓட்டுநர் மிகவும் பொறுப்பாக நடந்துகொண்டதாகவும், அவர் முன்பே கண்ணியமாக தெரிவித்தது நல்ல விஷயம் என்றும் பாராட்டி வருகின்றனர்.

இது போன்ற நிகழ்வுகள் முதல் முறையல்ல. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஓட்டுநர் ஒருவர் தான் பாராட்டோ சாப்பிட்டு கொண்டிருப்பதாகவும், பாதி முடிந்து விட்டது, மீதி சாப்பிட்டு முடித்து 5 நிமிடத்தில் வந்துவிடுவேன் என்றும், தயவு செய்து காத்திருக்க வேண்டும் எனவும் SMS அனுப்பியுள்ளது இணையத்தில் பெரும் பேசு பொருளாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: #FACTCHECK: SELFIE எடுக்கும் போது வந்த கடுப்பு.. ரசிகரின் செல்போனை தூக்கி எறிந்த ரன்பீர்.. VIDEO உண்மையா?