Viral
“அன்னதானத்தில் மோதல்.. போலி போராட்டம் நடத்தி wine shop-ஐ சூரையாடிய மர்ம கும்பல்” : புதுச்சேரியில் பகீர் !
புதுச்சேரி லிங்கா ரெட்டிபாளையத்தில் சாராயக்கடை ஒன்று இயங்கி வருகிறது. அதில் சந்தை புதுக்குப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் அமாவாசை முன்னிட்டு, சாராயக்கடை ஊழியர்கள் லிங்கா ரெட்டிபாளையத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கினர்.
அப்போது லிங்காரெட்டிபாளையத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அன்னதானத்தில் சாப்பிட சென்றபோது, உணவு தீர்ந்தவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இரு தரப்பு இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு இருந்த பெரியவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், நேற்று காலை லிங்காரெட்டிபாளையம் சாராயக்கடையில் வேலை செய்யும் சந்தை புதுக்குப்பத்தை சேர்ந்த தேவநாதன், விக்ரம், ரகுபதி மற்றும் விஷ்ணு ஆகியோருக்கும் லிங்கா ரெட்டிபாளையம் ராஜவேலு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அப்போது தேவநாதன் தரப்பினர் லிங்காரெட்டிபாளையம் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து அங்கு இருந்தவர்களை தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த ராஜவேலு உள்ளிட்ட லிங்காரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டடோர் அங்குள்ள சாராயக்கடை அருகில் ஒன்று கூடி அந்த சாராயக்கடைக்கு சாராயம் குடிக்க வருபவர்களால் பொதுமக்களுக்கு இடையூறு இருப்பதாகவும், அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.
அப்போது அவர்கள் திடீரென சாராயக்கடையின் உள்ளே புகுந்து அங்கு இருந்த சேர், டேபிள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி கடையை சூறையாடினர். அப்போது அங்கு சாராயம் குடித்துக்கொண்டு இருந்தவர்கள் இதனை பார்த்த உடன் ஓட்டம் பிடித்தனர்.
இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்டேரிகுப்பம் போலிஸார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி இது தொடர்பாக இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்,
Also Read
-
”பொய் செய்தியற்ற சமூகத்தை அமைப்போம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன் : லண்டன் சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
26 நிறுவனங்கள் - ரூ. 7,020 கோடி முதலீட்டு : ஜெர்மனி பயணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
சென்னையில் நீர் மெட்ரோ திட்டம்... முதற்கட்ட பணிகள் தொடக்கம் : செயல்படுத்தப்படும் 53 கி.மீ நீள பாதை என்ன?
-
மழைநீரைச் சேமிப்பதில் தீவிரம் காட்டும் சென்னை மாநகராட்சி... 4 ஆண்டுகளில் 70 குளங்கள் புனரமைப்பு !