Viral
‘ஜெயிலர்’ படத்தில் வாய்ப்பு வாங்கித் தருவதாக ரூ.8 லட்சம் மோசடி.. மாடல் அழகியை ஏமாற்றிய மும்பை கும்பல் !
மும்பையைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி சன்னா சூரி. இவர் 2007ம் ஆண்டு மிஸ் மகாராஷ்டிரா பட்டத்தையும் வென்றுள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தில் வாய்ப்பு வாங்கித் தருவதாக சன்னா சூரியிடம் இருந்து ரூ.8.5 லட்சத்தை மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மும்பை போலிஸில் புகார் அளித்துள்ளார். சன்னா சூரி. அந்தப் புகாரில் இவருக்கு கடந்த ஆண்டு பியூஸ் ஜெயின் என்பவர் இன்ஸ்டாகிரம் மூலம் அறிமுகியுள்ளார். பியூஸ் ஜெயின் நடிகர் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தில் புது முகங்கள் தேவை போலிஸ் உடையில் வீடியோ எடுத்து அனுப்பும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
அதன்படிசன்னா சூரியும் வீடியோ மற்றும் புகைப்படத்தை அனுப்பியுள்ளார். இதனையடுத்து பியூஸ் ஜெயின் புகைப்படத்தை ஜெயிலர் பட போஸ்டர் போல் வடிவமைத்து, அனுப்பியுள்ளார். மேலும் அறிமுக இயக்குநர் என ஒருவரை அறிமுகப்பட்டுத்தி அவருக்கு 2 படங்களில் வாய்ப்பு அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஆசை வார்த்தைக் கூறி வெளிநாட்டில் படம் நடிக்கச் செல்லவிருப்பதால், விசா கட்டணம் செலுத்த வேண்டும் எனவே ரூ.8.48 கொடுக்கும்படியும் பியூஸ் ஜெயின் கூறியுள்ளார். அவரின் வார்த்தையைக் கேட்டு சன்னா சூரியும் பணத்தை அனுப்பியுள்ளார்.
பின்னர் சில நாட்களுக்கு பிறகு விமானம் தாமதம் அதனால் படப்பிடிப்பு தொடங்கவில்லை எனப் பல்வேறு காரணங்களை கூறியுள்ளார் பியூஸ் ஜெயின். இந்நிலையில் பியூஸ் ஜெயின் பகிர்ந்த படத்தை சன்னா சூரி இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பகிர்ந்திருப்பதைப் பார்த்த ஜெயிலர் படக்குழு அவரின் தயாருக்கு தொடர்ப்புக்கொண்டு கேட்டுள்ளனர்.
அப்போது படக்குழு நாங்கள் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை எனக் கூறியுள்ளார். பின்னர் தாம் ஏமாந்துவிட்டத்தை அறிந்து பின்னர் போலிஸில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
“பா.ஜ.க.வினரின் DNA-வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது!” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
தமிழ் மண்ணில் மத கலவரத்தை திட்டமிட்டால் ஓட ஓட விரட்டியடிப்போம் : RSS தலைவர் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்
-
“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!