Viral
அந்த பைக்கின் மதிப்பு தெரியுமா ? -ஹார்லி டேவிட்சன் பைக்கில் பால் விற்பனை செய்யும் இளைஞர்.. வைரல் வீடியோ !
அமெரிக்காவை மையமாக கொண்ட பைக் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன் உலகளவில் பிரபலமான பைக்குகளை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் பைக்குகள் உலகின் மதிப்பு வாய்ந்த மற்றும் விலை அதிகமாக உள்ளதால் பணக்காரர்கள் மட்டுமே இதை பயன்படுத்தி வருகின்றனர்.
அதிலும், கோடிக்கணக்கான பைக் பிரியர்களின் விருப்பமான பைக்காக இது இருப்பதால் இதனை வாங்குவதும், ஒரு முறையாவது ஓட்டி பார்ப்பதும் பெருமை வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தற்போது 11 பைக் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்கிறது.
இந்தியாவில் ஹரியாணா மாநிலத்தில் பாவல் என்னுமிடத்தில் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு முழுவதும் இறக்குமதி செய்யப்பட்ட பாகங்கள் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.
இந்த நிலையில், இத்தனை மதிப்பு வாய்ந்த பைக்கான ஹார்லி டேவிட்சன் பைக்கை ஒருவர் பால் விற்பனை செய்ய பயன்படுத்திய செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக வெளியான வீடியோவில் 3 லட்சம் மதிப்பிலான ஹார்லி டேவிட்சன் பைக்கின் இரண்டு பக்கமும் பெரிய பால் கேன்களை மாட்டிக்கொண்டு செல்கிறார்.
இந்த வீடியோவை பார்த்த பலரும் இத்தனை காசு கொடுத்து வாங்கியது எல்லாம் இதற்குத்தானா என கேலி செய்து வருகின்றனர். ஆனால், இதை அந்த நபர் வெறும் விளம்பரத்துக்காக செய்வதாகவும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
“தந்தை பெரியார் விதைத்தது நாத்திகம் இல்லை; பகுத்தறிவு!” - Oxford பல்கலை.யில் முதலமைச்சர் பேச்சு!
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!