Viral
தேங்காயா? இளநீரா?... பாவம் அவங்களே குழம்பிட்டாங்க: பா.ஜ.க நடத்திய ஆர்ப்பாட்டத்தால் எழுந்த சிரிப்பலை!
பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர்கள் தாங்கள் எந்த கோரிக்கைக்காக போராடுகிறோம் என்பது கூட தெரியாமல் வந்தோம், கத்தினோம், கலைந்து சென்றோம் என்பதையே வாடிக்கையாக வைத்துள்ளனர்.
எதற்காக நீங்கள் போராடினீர்கள் என்று கேட்டால், 'ஒரு நிமிடம் அப்படியே தலை சுற்றிடிச்சு' என ரஜினி சொன்ன நிலைதான் இவர்களுக்கும் இருக்கும். கடந்த ஆண்டு புதுச்சேரியில் பா.ஜ.க நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது தனது சொந்த கட்சிக் கொடியையே தீயில் எரித்தனர்.
அந்த அளவிற்கு இவர்களுக்குக் கட்சியின் கொடியின் நிறத்தை கூட தெரியாமல் இருக்கின்றனர். தொண்டர்கள்தான் இப்படி என்றால் தலைவர்கள் இவர்களுக்கு மேல இருக்கிறார்கள். வாய் திறந்தாலே 'பொய் உருட்டுகள்'தான் வெளியே வருகிறது.
அதிலும் தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலை அவர்கள் எப்போதும் பொய் மட்டுமே பேசுபவராக இருந்து வருகிறார். அவர் பேசுவதற்கு ஆதாரம் கேட்டால் ஆவேசப்பட்டு பத்திரிகையாளர்களை மிரட்டுவதை வாடிக்கையாகவே வைத்துள்ளார்.
இந்நிலையில், விழுப்புரத்தில் பா.ஜ.க விவசாயிகள் அணியினர் பொங்கல் பரிசுத்தொகுப்பில் தேங்காய் வழங்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களின் ஆர்ப்பாட்டத்தைப் பார்த்த பொதுமக்களுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
என்ன நம்மைப் பார்த்து பொதுமக்கள் சிரிந்து கொண்டே செல்கிறார்கள் என்று ஒற்றும் புரியாமல் பா.ஜ.க தொண்டர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டே இருந்தனர்.
பின்னர்தான் அவர்களுக்கு நமது கையில் தேங்காய்க்குப் பதில் இளநீர் இருப்பதே மண்டைக்கு உரைத்தது. இருப்பினும் 'மீசையில் மண் ஒட்டாத' கதையாகக் கத்தி விட்டு அங்கிருந்து நைசாக நடந்து சென்று விட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"தூய்மை தொழிலாளர்களின் பணி நிரந்தரம் கோரிக்கை ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடு" - ஆதித்தமிழர் பேரவை !
-
முகவரி இல்லாதவர்களை வாக்காளர்களாக சேர்த்தது ஏன்? - தேர்தல் ஆணையர் விளக்கம் !
-
"அன்புமணி சோற்றுக்குள் பூசணிக்காயையே மறைத்திருக்கிறார்" - அமைச்சர் MRK பன்னீர்செல்வம் விமர்சனம் !
-
நாட்டிற்கே முன்னோடியான திட்டம்.. இணைய வழியில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன்.. தொடங்கி வைத்தார் முதல்வர்
-
தருமபுரியில் நலனுக்காக... ரூ.1705 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகள்... திறந்து வைத்த முதலமைச்சர்!