Viral

ஒருமுறை சார்ஜ் செய்தால் 631 கி.மீ ரேன்ஜ் வழங்கும் IONIQ 5 - Hyundai எலெக்ட்ரிக் காரின் சிறப்பு அம்சம் ?

உலகம் முழுவதும் சூழலியல் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் வகையில், கார் நிறுவனங்கள் தங்களில் உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் பெட்ரோல் - டீசல் கார்களுக்கு மாற்றாக புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்து வருகின்றனர். அவை மக்கள் மத்தியிலும் மிகுந்த செல்வாக்கை பெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தியாவிலும் எலெக்ட்ரிக் கார்களுக்காக தேவை அதிகரித்துள்ள நிலையில், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இதில் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கார் நிறுவனங்களில் முன்னணியில் உள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், அதிக கார்களை விற்பனை செய்து பட்டியலில் முன்னனியில் உள்ளது.

இத்தகைய பெருமையை கொண்ட ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் என்ற எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளர் மத்தியில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்தது. இந்நிலையில் சந்தையில் தனது அடுத்த எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யவுள்ளது ஹூண்டாய் நிறுவனம்.

அதன்படி ஹூண்டாய் நிறுவனம் சார்பில் அடுத்து வரவுள்ள எலெக்ட்ரிக் கார் ஐயோனிக் 5 (IONIQ 5). இந்த கார்களின் சோதனை ஓட்டத்தை ஹூண்டாய் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதனால் இந்த எலெக்ட்ரிக் கார் எப்போது வெளியாகும் என வாடிக்கையாளர்கள் காத்திருந்த நிலையில், நேற்றைய தினம் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது.

ஹூண்டாய் நிறுவனம் அடுத்த ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி துவங்கும் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வுக்காக தயாராகி வருகிறது. புது டெல்லியில் நடைபெறும் இந்த நிகழ்வு ஆட்டோ மொபைல் துறையில் முக்கியமான நிகழ்வாக கருத்தப்படும் நிலையில், ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய, கான்செப்ட் மற்றும் தற்போதைய மாடல்களை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் காட்சிப்படுத்தபடவுள்ளது.

இதனிடையே புதிய ஐயோனிக் 5 மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் ஐயோனிக் 5 மாடல் காரின் முக்கிய அம்சத்தை காணலாம்.

காரின் அளவீடுகளை பொறுத்தவரை 1890mm அகலம், 1625mm உயரமும் கொண்டுள்ளது. மேலும் காரின் வீல்பேஸ் 3000mm ஆக உள்ளது. மேலும் இந்த கார் மேட் கிராவிட்டி கோல்டு, ஆப்டிக் வைட் மற்றும் மிட்நைட் பிளாக் பியல் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.

அதுமட்டுமல்லாது இந்த காரில் 72.6 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் உள்ளது. அதனால் 214 ஹெச்பி பவர் மற்றும் 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறனை கொண்டுள்ளது. இதில் மற்றொரு முக்கிய அம்சமாக, இந்த காரை ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 631 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும். இதற்கான ARAI சான்றையும் பெற்றுள்ளது.

சார்ஜிங் வசதியை பொறுத்த வரை ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் 350 கிலோவாட் DC சார்ஜர் மூலம் இந்த காரை 10-80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 18 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

இதில் மேலும் சில முக்கிய அம்சங்களும் உள்ளது. அதாவது விபத்தில் இருந்து தப்பிக்க இந்த காரில் 6 ஏர்பேக் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 4 வீல்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, டிசைனை பொருத்தவரை புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடலில் Parametric Pixel LED headlamp, முன்புறம், பின்புறம் பம்பர்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட Skid plates, Active air flaps, 20 inch dual tone alloy wheels, Flush fit door handles, LED tail lights, shark fin antenna, integrated spoiler, raked rear windshield வழங்கப்பட்டு இருக்கிறது.

காரின் உள்பகுதியில் Dark pebble gray interior theme, Sliding Center Console, Sliding Glove Box, Level 2 ADAS, Dual 12.3 Inch Screens, V2L (Vehicle to Load) Technology போஸ் நிறுவனத்தின் 8 ஸ்பீக்கர் மியுசிக் சிஸ்டம், புளூ லின்க் கனெக்டெட் கார் தொழில்நுட்பம், பவர்டு டெயில்கேட், ஹீடெட் மற்றும் வெண்டிலேடெட் முன்புற இருக்கைகள், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங், பவர்டு முன்புற இருக்கை மற்றும் லம்பர் சப்போர்ட், மெமரி ஃபன்ஷன் உள்ளது.

Also Read: Netflix பயனர்களா நீங்கள்..? NEW YEARக்கு OFFER கொடுத்த நிறுவனம்.. அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்!