Viral
பறக்கும் விமானத்தில் வயிறு வலி.. கழிவறை சென்ற பெண் குழந்தையோடு வந்த அதிசயம் - மருத்துவர்கள் கூறியது என்ன?
தென் அமரிக்க நாடான ஈக்வடார் நாட்டில் இருந்து ஸ்பெயினுக்கு KLM நிறுவனத்தை சேர்ந்த விமானத்தில் பல்வேறு பயணிகள் பயணித்து கொண்டிருந்தனர். அப்போது அதில் பயணம் செய்த தமரா என்ற பெண் பயணி ஒருவர் வயிறு வலிக்கிறது என்று கூறி கழிவறை சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் விமானம் நெதர்லாந்தை நெருங்கி கொண்டிருந்தது. அப்போது கழிவறைக்கு சென்று பெண், அங்கேயே வயிறு வலியுடன் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். குழந்தை பிறந்ததை கண்டு அந்த பெண் கடும் அதிர்ச்சியானார். ஏனெனில் தான் கர்ப்பமாக இருப்பதே அந்த பெண்ணுக்கு தெரியாமல் இருந்துள்ளது.
இப்படி இருக்கையில் தனக்கு எப்படி குழந்தை பிறந்திருக்கும் என்று கடும் ஆச்சர்யத்தில் உறைந்து போனார். இதையடுத்து பயணி ஒருவர் கழிவறையில் குழந்தை பெற்றுள்ளது தெரிந்த விமான ஊழியர்கள் ஆச்சர்யமடைந்ததோடு, அவருக்கு தேவையான உதவிகளையும் செய்தனர். அதோடு அந்த விமானத்தில் ஆஸ்திரிாயவைச் சேர்ந்த மருத்துவர்களும் அவருக்கு முதல் உதவிகளை செய்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து நெதர்லாந்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. அங்கு தாய் மற்றும் குழந்தையை விமான நிலையத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தாயும், சேயுக்கும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
பறக்கும் விமானத்தில் எதிர்ப்பாராத நேரத்தில் தனக்கு ஆண் குழந்தை பிறந்ததால், அதற்கு maximiliano (மேக்சிமிலியானோ) எனப் பெயர் வைத்துள்ளார் அந்த பெண். தற்போது புதிதாக விமானத்தில் பிறந்த மேக்சிமிலியானோவிற்கு குடியுரிமை தெடர்பான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தான் கர்ப்பமாக இருப்பதை அறியாத இந்த பெண்ணுக்கு ஹார்மோன் குறைபாட்டால் வரும் Cryptic Pregnancy இருப்பதால், அவர் தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்திருக்கவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இதே போல், வெளிநாட்டில் தான் கர்ப்பமாக இருப்பதை அறியாத கல்லூரி மாணவி ஒருவர், தனது வீட்டிலுள்ள கழிவறையில் குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!