Viral
மரப்பாதை விவகாரம் : “இனி திமுக ஆட்சியில் ஏன் புயல் வருதுனு கூட கேட்டாலும் கேட்பாங்க” : மனுஷ்ய புத்திரன் !
மெரீனாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு அமைக்கப்பட்ட மரப்பாதை, புயலில் பாதிக்கப்பட்டது பற்றி ஏராளமான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் முன் வைக்கப்படுகின்றன. ஏதோ அதில் ஊழல் நடந்ததுபோன்ற தோற்றங் கள் எல்லாம் உருவாக்கப்படுகின்றன.
கடற்கரையில் கான்கிரீட் கட்டுமானங்களை உருவாக்குவதற்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் சார்ந்த தடை இருக்கிறது என்று சொன்னால் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், மனம் போனபோக்கில் வன்மத்துடன் எழுதுகிறார்கள். சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒரு அரசு என்ன செய்ய முடியுமோ அதைத்தான் செய்திருக்கிறது.
மேயரும் அமைச்சர் சேகர்பாபுவும், "மரப்பாலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் சில தினங்களில் சரி செய்யப்படும்" என்று உறுதி அளித்திருக்கிறார்கள். "வருங் காலத்தில் இத்தகைய பாதிப்புகள் ஏற்படாதவண் ணம் அந்தப் பாதை உறுதிப்படுத்தப்படும்" என்பதையும் அமைச்சர் கூறியிருக்கிறார். இதற்கு மேல் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறார்கள்?
முற்றிலும் ஒரு புதிய விஷயத்தைச் செய்கிற போது அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேறுவதுதான் நடைமுறையில் சாத்தியம். இவ்வளவு விமர்சனங்களை முன்வைக்கிற எவரும், மாற்றுத்திறனாளிகளுக்கு இப்படி ஒரு பாதை வேண்டும் என ஒருமுறைகூட கோரியதில்லை. இந்த அரசுதான் அதை யோசித்தது. செய்தது.
இயற்கைப் பேரிடர்களில் எவ்வளவு சாலைகளும் பாலங்களும் கட்டிடங்களும் பாதிக்கப்படுகின்றன. அவை எல்லாம் உறுதியற்ற தன்மையினால் மட்டும்தான் பாதிக்கப்படுகின்றனவா? பேரிடர்களின் தன்மை, பாதிப்புக்குள்ளாகின்றனவற்றின் அமைவிடத்திற்கு ஏற்ப எல்லாம் மாறுபடுகின்றன.
ஆனால் இந்த மரப்பாலம் குறி வைக்கப்படுவதன் காரணம். இந்தப் பாலத்திற்குக் கிடைத்த நற் பெயர்தான். பலநூறுகோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகமும் அண்ணா நூற்றாண்டு நூலகமும் அரசியல் காழ்ப்புணர்வினால் புறக்கணிக்கப்பட்டபோது. ஏன் இந்த ஆவேசக் குரல்கள் எழவில்லை. ?
புயலுக்கு ஏற்ப திட்டமிட்டு கட்டியிருக்கவேண்டுமாம். கஜா புயல்போன்ற ஒரு புயல் வந்திருந்தால் இரும்புப் பாலம்கூட பறந்திருக்கும். புத்திரன் ஒரு மரப்பாதை எவ்வளவு தாங்குமோ அவ்வளவுதான் தாங்கும். இந்தப் பாதையை அரசு மேலும் மேம்படுத்தும். அடுத்த ஆண்டும் மரப்பாதை இதைவிட பெரிய புயலில் பாதிக்கப்பட்டால் அடுத்த ஆண்டும் சரி செய்வோம்.
கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஃபைபர் படகுகள்கூட சேதமடைந்திருக்கின்றன. வேரோடு மரங்கள் சாய்ந்திருக்கின்றன. ஆனால், இந்த அரசை எப்படியாவது குறை காண வேண்டும் என நினைப்பவர்கள் தர்க்கமற்ற வாதங்களை முன்வைக்கிறார்கள்.
இத்தனைக்கும் மரப்பாதையில் கடலுக்கு மிக அருகில் உள்ள பகுதிதான் சேதமடைந்திருக்கிறது. கடலுக்கு அருகில் உள்ள எந்த மரக்கட்டுமானமும் ஒரு புயலால் பாதிக்கப்படுவதை எவரால் தடுக்க இயலும்? பாலங்களும் அடுக்குமாடிக் கட்டிடங்களும் இடிந்து விழுந்ததை கடந்த பத்தாண்டு ஆட்சியில் பார்த்தவர்கள்தானே நீங்கள்? இனி தி.மு.க. ஆட்சியில் ஏன் புயல்கள் வருகின்றன என்று கேட்டாலும் கேட்பார்கள்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!