Viral
“எங்க வந்து போட்டோ எடுக்குற.. அங்குட்டு போங்கடா..” - திருமண ஜோடி மீது மட்டையை தூக்கிய வீசிய யானை : Video
பொதுவாக மனிதர்களுக்கு இருக்கும் சில உணர்வுகளை நாம் சில விலங்குகளிடம் காண முடியும். குறிப்பாக கோபம், பாசம், சோகம் உள்ளிட்ட அனைத்தும் விலங்குகள் நம்மிடமும் வெளிப்படுத்தும். அப்படி கோபப்படும் விலங்குகள் மனிதர்கள் போல் யோசிக்க கூட செய்யாமல், அதன் உரிமையாளரையே தாக்கும். மேலும் அருகில் யார் இருந்தாலும் அது பார்க்காது.
அதிலும் குறிப்பாக இது போன்ற மூர்க்கத்தன்மை யானையிடமே எளிதாக காண முடியும். அதற்கு மதம் பிடித்தால் அருகிலிருப்பவர்கள் யார் என்ன என்று கூட கவனிக்காது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறியுள்ளது. அதாவது திருமண ஜோடி ஒன்று போட்டோ சுட எடுக்கும்போது அவர்கள் மீது தென்னை ஓலை ஒன்றை எடுத்து வீசுவது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதவாது கேரளாவில் உள்ள ஜோடி ஒன்று யானை அருகே இருந்து திருமண போட்டோ ஷூட் எடுத்துள்ளது. அப்போது ஜோடி தங்கள் ரோமன்ஸ் போஸை யானை முன்பு கொடுத்து போட்டோ எடுத்துள்ளனர். அப்போது அந்த யானை என்ன நினைத்தது என்று தெரியவில்லை.. திடீரென்று தன் அருகே இருந்த ஓலை மட்டையை எடுத்து அந்தஜோடி மீது வீசியது.
அப்போது அந்த ஓலை மட்டை மணமகன் மீது பட்டது. மணமகள் மீது அந்த மட்டை படாமல் நொடி பொழுதில் தப்பித்தார். மேலும் மணமகன் மீது மட்டை விழுந்ததை பொருட்படுத்தாமல் மணமகள் சிரித்தபடியே இருவரும் அந்த இடத்தை விட்டு சென்றனர். இதனை அந்த போட்டோ ஷூட் எடுத்த நிறுவனம் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது தற்போது பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
முன்னதாக இதே கேரளாவில் அமைந்துள்ள குருவாயூர் கோயிலில் திருமண ஜோடி ஒன்று யானை முன்பு நின்று போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டிருக்கும், திடீரென்று கோபப்பட்ட யானை அதன் அருகிலிருந்த பாகனை தூக்கி வீசியது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!