Viral
"BUT அந்த டீல் எனக்கு பிடிச்சுருக்கு.." - தம்பதிக்கு இலவச பீட்சாவை அறிவித்த PIZZA HUT.. எதற்காக தெரியுமா?
தற்போதைய சூழலில் 90ஸ் கிட்ஸ்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. பார்த்திபன்-வடிவேலு படத்தில் வரும் 'இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்' என்ற காமெடியை போல முதலில் நல்ல பெண் கிடைக்கவேண்டும் என்பதில் ஆரம்பித்து இறுதியில் பெண் கிடைத்தால் போதும் என்று 90ஸ் கிட்ஸ் நிலைமை இருந்து வருகிறது.
இந்த நிலையில் அதை மெய்ப்பிக்கும் விதமாக திருமணம் ஒன்று அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. அதில் பெண் போட்ட பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அந்த பெண்ணை ஒருவர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மின்டு என்பவருக்கும் சாந்தி என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமண சடங்குகள் முடிந்த நிலையில், மணமகனும், மணமகளும் ஒரு பெரிய அலங்கரிக்கப்பட்ட தாளில் எழுதப்பட்டிருந்த தாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இது தொடர்பான வீடியோவை தம்பதிகள் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த ஒப்பந்தம் திருமணம் நடைபெறுவதற்கு முன்பே இருவரும் ஒப்புக்கொண்ட ஒப்பந்தங்கள் என்றும், திருமணத்துக்கு பின்னர் இதை பின்பற்றவேண்டும் என்பதற்காக இது போன்ற ஒப்பந்தத்தை முன்னரே செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் ஞாயிறு காலை உணவை கணவர் செய்ய வேண்டும், வீட்டு உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், நேரத்துக்கு வீட்டுக்கு வர வேண்டும், பார்ட்டிகளில் நல்ல புகைப்படம் எடுக்க வேண்டும், 15 நாட்களுக்கு ஒருமுறை ஷாப்பிங் செல்லவேண்டும், தினமும் ஜிம் செல்லவேண்டும், போன்ற ஒப்பந்தங்கள் இருந்தது.
ஆண் தரப்பில், மனைவி தினமும் சேலைதான் கட்ட வேண்டும், கணவருடன் மட்டுமே இரவு பார்ட்டிகளுக்கு செல்ல வேண்டும், மாதத்தில் ஒரு பீட்சாவுக்கு மட்டுமே அனுமதி போன்ற சில ஒப்பந்தங்களும் அதில் இருந்துள்ளது.
இந்த நிலையில் திருமணத்தின்போது மாதாமாதம் பீட்சா வாங்கி தர வேண்டும் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக தம்பதிக்கு பீட்சா ஹட் உணவகம் மாதம் ஒரு முறை வீதம் ஒரு ஆண்டுக்கு இலவசமாக பீட்சா அளிப்பதாக பீட்சா ஹட் உறுதியளித்துள்ளது. இதனை தம்பதி தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
Also Read
-
புத்தக காதலர்களே தயாராகுங்கள் : ஜன. 8 ஆம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்!
-
சென்னை கடற்கரை பகுதிகளை பாதுகாக்க கடல்சார் உயரடுக்கு பாதுகாப்புப்படை : அதன் சிறப்புகள் என்ன?
-
பெயர் நீக்கம் மட்டுமே பிரச்சனை அல்ல: VBGRAMG சட்டத்தின் ஆபத்து குறித்து பழனிசாமிக்கு பாடம் எடுத்த முரசொலி
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!