Viral

ஹெல்மெட் விதிகளை மீறிய போலிஸ்கள்.. அபராதம் விதித்த சக போலிஸ்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

பொதுவாக சாலை விதிகளை மீறுபவர்களுக்கு டிராபிக் போலீஸ் அபராதம் விதிப்பது வழக்கம். அபராதம் கட்டவில்லை என்றால் அவர்களுக்கு சிறை தண்டனையும் விதிப்பர். சிலர் விதிகளை மீறி வருபவர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு அபராதம் விதிக்காமல் விட்டுவிடுவார். ஆனால் இங்கு ஒரு போலீஸ் சக போலீஸ்-க்கு எதிராக ஹெல்மெட் விதிகளை மீறியதற்காக வழக்குப்பதிவு செய்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள ஆர்.டி நகர் என்ற பகுதியில் காவல் அதிகாரி ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது அவரது தலையில் வாகனத்திற்குரிய ஹெல்மெட் மாட்டாமல், பாதி ஹெல்மெட்டை மாட்டி வந்துள்ளார்.

அப்போது அந்த பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த ட்ராபிக் காவல் அதிகாரி ஒருவர், இரு சக்கர வாகனத்தில் வந்த மற்றொரு அதிகாரியின் வண்டியை மறித்துள்ளார். இதையடுத்து அவர் ஹெல்மெட் போடும் விதிகளை மீறியதாக கூறியுள்ளார். அதோடு அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு இந்த புகைப்படத்தை ஆர்.டி நகர் ட்ராபிக் காவல்துறையினர் தங்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் அதில், "குட் ஈவினிங். போலீஸுக்கு எதிராக அரை ஹெல்மட் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தற்போது இணையத்தில் வேகமாக பரவி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒரு போலீசே போலீஸ் அதிகாரிக்கு அபராதம் விதித்துள்ள நிகழ்வு பொதுமக்களிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அரியவகை நோயால் 15 ஆண்டுகளாக தவித்த ஈராக் சிறுவன்.. களத்தில் இறங்கி சாதித்த இந்திய மருத்துவர்கள் !