Viral
மாதவிடாய் தீட்டு உருவானது எப்படி ? - கல்யாணம் செய்த பெண்கள் நெற்றிக்கு மேல் பொட்டு வைப்பது ஏன் ?
பெண் சார்ந்த பல விஷயங்கள் எப்போதும் இந்தியச் சமூகத்தில் taboo-வாகத்தான் இருக்கிறது.
Taboo என்றால் சமூகத்திலிருந்து விலக்கப்பட்டது என அர்த்தம். புனிதம் என சொல்லியோ பாவம் என சொல்லியோ ஒரு விஷயத்தை சமூகப் புழக்கம் அல்லது உரையாடல் ஆகியவற்றிலிருந்து விளக்கி வைப்பதைத்தான் taboo என்கிறார்கள்.
இந்தியாவை பொறுத்தவரை எதன் மேல் அதிகம் பயம் இருக்கிறதோ அது புறக்கணிக்கப்படும். எது புரியவில்லையோ அது மறுக்கப்படும்.
பெண்களின் உடலும் சரி, அவர்களின் வாழ்வும் சரி பெருமளவுக்கு taboo-வாகத்தான் இருக்கிறது.
மாதவிடாய் அவற்றில் ஒன்று!
மனிதன் தனது ஆதிகாலங்களில் வேட்டை மிருகங்களிடம் தப்பிக்க பல உத்திகள் பயன்படுத்தினான். குழுக்களாக வாழ்ந்த அவனுக்கு, தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதே தலையாய பிரச்சினையாய் இருந்தது. பெண்ணின் மாதவிடாய் காலத்தில் ரத்த வாசனையை மோப்பம் பிடித்து மிருகம் வந்துவிடக் கூடாதென, சம்பந்தப்பட்ட பெண் வேட்டையாடப்பட்டாலும் பரவாயில்லை என குழுவுக்கு வெளியே தூர தங்க வைத்தான்.
ரத்த வாசனை பிடித்து மிருகம் வந்தால் உயிரிழப்பு ஒரு பெண்ணோடு போய்விடும். குழு தப்பித்துவிடும் என்ற சுயநலம் தான் மாதவிடாய் காலத்தில், பெண்ணை தூர வைத்தல் என்னும் பழக்கம் தொடங்க முதல் காரணம்.
அன்றிருந்த மனிதன் நாகரிகம் அடைந்துவிட்டதாக நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் யதார்த்த நிலவரம் என்ன?
ரத்தத்தை நெற்றியில் இட்டுத்தான் மாதவிடாய் பெண்களை ஆண் அடையாளப்படுத்தினான். பொட்டு வைத்த பெண்கள் உறவுக்கு தயாரானவர்கள் என சமூகத்துக்கு விளம்பரப்படுத்தினான். ஆண் உருவாக்கிய மதமும், கடவுள்களும் அதையே வேதமாக்கி போதித்தன.
இன்றும் பாருங்கள், கல்யாணம் செய்த பெண்கள் நெற்றிக்கு மேல், பொட்டு வைத்திருப்பார்கள். ஏன் தெரியுமா? அந்த பெண் கன்னித்திரை கிழிந்து ரத்தம் சிந்திவிட்டாள் என அடையாளப்படுத்துவதற்காக. முதல் கலவி முடிந்துவிட்டது என அறிவிப்பதற்காக.
இன்னுமே ஆணுக்கும் மதத்துக்கும் கடவுளுக்கும் பெண்ணின் மாதவிடாய் ரத்தம் என்றால் பயம்தான். பெண் என்றாலும் பயம்தான். பொட்டு வைக்க சொல்கிறோம். மாதவிடாய் காலத்தில் பொதுவில் புழங்க தடை விதிக்கிறோம். பெண்ணை நாம் அடையாளப்படுத்துவதே அவளின் இனப்பெருக்கத்தை முன்னிறுத்தி மட்டுமே.
அதிலும் உச்சமாக இவற்றை எல்லாம் சரி என பேசும் 'முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை' ரகத்தினரை எல்லாம் என்ன சொல்ல!
உண்மையில் மாதவிடாய் ஏற்புதான் சமூக ஏற்றம்.
பயப்படும் விஷயத்தை புறக்கணிப்பதும் புரியாத விஷயத்தை மறுப்பதும் மட்டுமே சூழல்களாக மாறி போன தேசத்தில், பொட்டுக்கு மறுப்பு தெரிவித்து நேப்கினில் ரத்தத்தை தேக்கி குப்பையில் போடும் பெண் முற்போக்கானவளே.
தன் உடலையும் கலவி விருப்பத்தையும் மட்டுமே இலக்குகளாக கொண்டு கட்டப்பட்டிருக்கும் எல்லா நம்பிக்கைகளையும் முறைகளையும் அடித்து நொறுக்கி தூக்கி எறிபவள் புரட்சிக்காரியே!
Also Read
-
“தி.மு.க.வை வகுத்தால் தமிழ்நாடு! தமிழ்நாடு மக்களை கூட்டினால் தி.மு.க!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தந்தை பெரியார் பிறந்தநாள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்பு !
-
எதிர்தரப்பு வாதங்களை கேட்காமலே அதானிக்கு ஆதரவாக வெளியான தீர்ப்பு... அதிர்ச்சி அளித்த நீதிபதிகள் !
-
“பச்சை, மஞ்சள் கலர் பஸ்ல யாரு வந்தாலும், கடைசியா பிங்க் கலர் பஸ்தான் ஜெயிக்கும்” - துணை முதலமைச்சர் கலகல!
-
என்றென்றும் ஒலிக்கும் குரல்... அன்றும்.. இன்றும்... என்றும் பெரியார்! - #HBDPeriyar147 !