Viral
சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ஏமாற்றிய யூடியூபர் - அடுத்த சர்ச்சையில் சிக்கிய பிரபல யூடியூப் சேனல் !
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் குருதேவன். இவர் கோவை 360 என்ற பெயரில் யூடியூப் ஒன்றை நடத்தி வருகிறார். ஒரு மில்லியன் பேர் பின் தொடரும் அந்த யூடியூப் சேனலில் பிராங்க் செய்து வீடியோ வெளியிட்டு சம்பாரித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் செய்த பிராங்க் நிகழ்ச்சி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்ததால், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக வலைதளங்கள் மூலம் போலிஸாருக்கு புகார் சென்றுள்ளது.
காவல்துறையினரும் அதன்பின்னர் தொடர்ந்து விசாரித்து வந்த நிலையில், கோவை 360 சேனலில் செய்த பிராங்க் நிகழ்ச்சி இடையூறாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அத்தகைய சேனலில் மீது கோவை போலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
வழக்குப்பதிவுகுறித்து கோவை போலிஸார் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில், “கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், உத்திரவின் பேரில் கோவையில் ப்ராங்க் விடியோ என்ற பெயரில் பெண்கள் மற்றும் முதியோர்களது சம்மதம் ஏதும் இன்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராக்கள் மூலம் அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு அவர்களை மனரீதியாகவும் , உடல்ரீதியாகவும் துன்புறுத்தும் வகையில் , வீடியோக்கள் எடுப்பவர்கள் குறித்து கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் நிலைய போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் , ” கோவை 360 டிகிரி ” என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்தவர்கள் “ப்ராங்க் விடியோ” என்ற பெயரில் பொதுமக்களின் சம்மதம் இன்றி அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் , உடல்ரிதியாகவும் , மனரீதியாக துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்டு அதை வீடியோ எடுத்து ” கோவை 360 டிகிரி ” என்ற யூடியூப் சேனலில் வீடியா வெளியிட்டது கண்டறியபட்டுள்ளது.
அதன்பேரில் கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசார், கோவை 360 டிகிரி என்ற யூடியூப் சேனல மீது 354D IPC & 4 of TNPHW Act r / w 66E IT Act ன் படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ப்ராங்க் விடியோ தொடர்பாக தேவையின்றி பொதுமக்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது கோவை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். இதனையடுத்து வழக்குப்பதிவு குறித்து ஒருமாதம் கழித்து வீடியோ வெளியிட்ட அதன் உரிமையாளர் நண்பர்களின் நண்பர்களை வைத்தே பிராங்க் செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் மீது புதிய புகார் ஒன்று எழுந்துள்ளது. யூடியூப் சேனலுக்கு நடிக்க வரும் பெண்ணைகளை சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, ஏமாற்றியுள்ளதாகவும் நடித்துக்காட்டிய பணத்தை தராமல் இழுத்தடிப்பதாகவும் கூறப்படுதாக செய்திகள் கசிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி... விண்ணப்பிப்பது எப்படி?
-
3 நாட்களுக்கு AI & Digital Marketing பயிற்சி... தமிழ்நாடு அரசின் அறிவிப்பின் விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டில் சுயமரியாதையை நிலைநாட்டும் ஆண்டாக 2026 மலரட்டும்!” : துணை முதலமைச்சர் வாழ்த்து!
-
புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட CM MK Stalin: மிகை ஊதியம்,பொங்கல் பரிசு!
-
“2025 ஆம் ஆண்டு முடிவுற்று... 2026 ஆம் ஆண்டு பிறக்கிறது!” : முரசொலி தலையங்கம்!